கண் அசைத்த மோடி.. ஏழு மாநிலங்கள் டார்கெட்.. 2027 தேர்தல் வேலையை ஆரம்பித்த பாஜக!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எப்போதுமே தேர்தல்கள் என வந்துவிட்டால் கடைசி வரை இறங்கி வேலை செய்யும் கட்சி தான் பாஜக. அடுத்து சட்டசபை தேர்தல் என்பது அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசத்தில் தான் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருந்தாலும் கூட இப்போதே தேர்தலை மனதில் வைத்து பாஜக காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் பாஜக அமைப்பு ரீதியாக தன்னை வலுப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களின் முக்கிய ஆலோசனை கூட்டம் செப்டம்பர் 29ம் தேதி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகிக்க உள்ளார்.

BJP Nanrendra Modi

பாஜக கூட்டம்

சமீபத்தில் மாநிலங்களுக்கான பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களை பாஜக மாற்றியமைத்த நிலையில், அதற்கு பிறகு நடைபெறும் முதல் பெரிய அளவிலான கூட்டமாக இது அமைந்துள்ளது. பாஜகவை அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது, மாநில அளவிலான பணிகளை விரிவுபடுத்துவது, வரவிருக்கும் சட்டசபை தேர்தல்களுக்கான தயாரிப்புகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2027ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. புதிய பொறுப்பாளர்கள் மூலம் இந்த மாநிலங்களில் கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

பொறுப்பாளர்கள்

முன்னதாக கடந்த செப்டம்பர் 23ம் தேதி தான் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்கான பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களை பாஜக அறிவித்தது. இதன் மூலம் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான பொறுப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தின் பொறுப்பாளராக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் ஜகதீஷ் படேல், மேதா குல்கர்னி, பிரதீப் வர்மா, அனந்த் ஓஜா ஆகிய 4 பேர் இணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற மாநிலங்கள்

பஞ்சாப் மாநிலத்துக்கு சதீஷ் பூனியா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வீரேந்திர சச்தேவா மற்றும் அல்கா குர்ஜர் ஆகியோர் இணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் பொறுப்பு ராம் மாதவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரவிந்த் மேனன் மற்றும் பன்சூரி ஸ்வராஜ் ஆகியோர் இணைப் பொறுப்பாளர்களாக உள்ளனர்.

ஹரியானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் பொறுப்பு ஸ்மிருதி இரானிக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானாவுக்கு சுனில் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி மாநில பொறுப்பு வினய் சஹஸ்ரபுத்தேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ராம் மாதவுக்கு உத்தரகாண்ட் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

பாஜக டார்கெட்

இந்த புதிய தலைவர்கள் மூலம் கட்சி அமைப்பை வலுப்படுத்தி 2027 மற்றும் 2028 சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் மாநிலங்களில் வெல்ல வேண்டும் என்பதே பாஜகவின் இலக்காகும். மேலும், 2029 லோக்சபா தேர்தலுக்கும் இப்போது இருந்தே வலுவான அடித்தளம் அமைக்க வேண்டும் என்பதையும் மனதில் வைத்தே புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், புதிய பொறுப்பாளர்களின் கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 29ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கட்சியில் அமைப்பு ரீதியாக எதற்கெல்லாம் முன்னுரிமைகள் தரப்பட வேண்டும், மாநில அளவில் நடைபெறும் பணிகள், பாஜகவின் சாதனைகளை மக்கள் கொண்டு செல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக உத்தர பிரதேசம், பஞ்சாப், குஜராத், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 2027ல் தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+