இது எங்களுக்கு கை வந்த கலை.. இப்படித்தான் ஆட்சி அமைக்க போகிறோம்.. ஹின்ட் கொடுத்த மோடி!
லோக்சபா தேர்தலுக்கு பின் எப்படி ஆட்சி அமைக்க போகிறோம் என்பது குறித்து பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பின் எப்படி ஆட்சி அமைக்க போகிறோம் என்பது குறித்து பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசி இருக்கிறார்.
லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று லோக்சபா தேர்தலின் 6 ம் கட்ட தேர்தல் நடந்து தேர்தல் கொண்டு இருக்கிறது. அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 7ம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
மே 23ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பாஜகவின் அடுத்த கட்ட திட்டங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.

பாஜக எப்படி
லோக்சபா தேர்தலுக்கு பின் எப்படி கூட்டணி அமைப்பது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் இப்போதே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மொத்தம் காங்கிரஸ் கட்சியோடு சேர்த்து 21 கட்சிகள் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக சேர வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்த நிலையில் பாஜகவும் கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்க முடிவெடுத்துள்ளது.

என்ன பேச்சு
நேற்று பிரச்சாரத்தில் பேசிய மோடி, கூட்டணி அமைப்பது எங்களுக்கு கைவந்த கலை. கூட்டணி ஆட்சியை நாங்கள் எளிதாக கொடுப்போம். நானே பாஜகவின் பல கூட்டணி ஆட்சிக்காக, பல மாநிலங்களில் உழைத்து இருக்கிறேன். அதனால் கூட்டணியை அமைப்பு எனக்கு எளிதானது.

உதாரணமான ஆட்சி
வாஜ்பாய் தலைமையில் நாங்கள் வலுவான கூட்டணி ஆட்சியை கொடுத்தோம். அதேபோல் எங்களால் எப்போதும் கூட்டணி ஆட்சியை கொடுக்க முடியும். கூட்டணி ஆட்சிதான் அமைய வேண்டும் என்றால், எங்களால் சிறப்பான கூட்டணி ஆட்சியை அமைத்து நாட்டை வழி நடத்த முடியும், என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே சொன்னார்
ஏற்கனவே ஒரு மாதம் முன் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி சிறிய கட்சிகளை கூட கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். நாட்டின் நலனுக்காக எதிரிக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கவும் தயார். தேர்தலுக்கு பின் யார் எங்களுடைய கூட்டணிக்கு வந்தாலும் சேர்த்துக் கொள்வோம் என்று குறிப்பிட்டார்.

என்ன சொல்ல வருகிறார்
இதன் மூலம் லோக்சபா தேர்தலுக்கு பின் பாஜக புதிய மாநில கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்புள்ளது. முக்கியமாக அதிக இடங்களை வெல்லும் மாநில கட்சிகளை பாஜக இழுக்க பார்க்கும் என்கிறார்கள். இதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணி எப்படி பதில் அளிக்க போகிறதோ..!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications