இந்தியாவில் சுனாமிக்கு பின் டெல்லி நில அதிர்வு.. இரவு நேர பீதியை படம் போல் விவரித்து குஷ்பு கவலை
இந்தியாவில் சுனாமிக்கு பிறகு இந்த நில அதிர்வை உணர்கிறேன் - குஷ்பு ட்வீட்
டெல்லி: இந்தியாவில் சுனாமிக்கு பிறகு இந்த டெல்லி நில அதிர்வை உணர்கிறேன் என நடிகை குஷ்பு ட்வீட் போட்டுள்ளார்.
ரசிகர்களால் கோயில் கட்டி கொண்டாடப்பட வைத்த நடிகை குஷ்பு, இதுவரை யாருக்கும் இல்லாத அங்கீகாரத்தை மக்கள் இவருக்கு கொடுத்தனர். 1990களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். முறைமாமன் படத்தை இயக்கிய போது இயக்குநர் சுந்தர் சி- யுடன் காதல் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை திருமணம் செய்து கொண்டு இரு பெண் குழந்தைகளுக்கு தாயானார். திருமணத்திற்கு பிறகு சில படங்களில் நடித்த குஷ்பு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் சில சீரியல்களையும் தயாரித்திருந்தார்.

அரசியலில் குஷ்பு
இந்த நிலையில் அரசியலுக்கு வந்த குஷ்பு திமுகவில் இணைந்தார், பின்னர் திமுகவிலிருந்து விலகி 2014 ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். அங்கும் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என கருதி அக்கட்சியிலிருந்து 2021 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இவர் கடந்த சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

குஷ்பு
இதையடுத்து அவர் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவர் அண்மையில் தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த பதவியை வைத்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு நியாயம் பெற்று தருவேன். யாராக இருந்தாலும் என்னை அணுகுங்கள் என தெரிவித்திருந்தார்.

டெல்லி
இதனால் அவர் டெல்லியில் இருந்து தனது பணிகளை கவனித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானிலுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக வைத்து ரிக்டர் அளவில் 6.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டது.

குஷ்பு ட்வீட்
இதுகுறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: டெல்லியில் நிலஅதிர்வு 4 நிமிடங்கள் நீடித்தது. வீட்டில் உள்ள மின்விசிறிகள், அலங்கார விளக்குகள் அப்படியே நகர்ந்தன. சோஃபாக்களும் அமைதியான ஜெனரேட்டர் போல் வேகமாக சப்தம் எழுப்பியது. இதை பார்க்கும் போது வீட்டை விட்டு வெளியேறுங்கள் என சொல்வது போல் இருந்தது.

நில அதிர்வால் தஞ்சம்
நாங்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டோம். தற்போது எந்த பிரச்சினையும் இல்லை. வீடு திரும்புங்கள், பாதுகாப்பாக இருங்கள், பத்திரமாக இருந்து கொள்ளுங்கள். டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டதும் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்தியாவில் சுனாமிக்கு பிறகு இந்த நில அதிர்வைத்தான் நான் உணர்கிறேன் என ட்வீட் போட்டுள்ளார். இவரை போலவே டெல்லியில் உள்ள எம்பி ரவிக்குமாரும் நில அதிர்வை உணர்ந்தேன் என ட்வீட் போட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications