இளைஞர்கள் ஆதரவை மொத்தமாக இழக்கும் மோடி? நிலைமையை சமாளிக்க புதிய யுக்தி.. இது வேலைக்கு ஆகுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜூலை 20ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் மீது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இளைஞர்கள் மற்றும் குறிப்பாக Gen Z தலைமுறையினரை கவரும் வகையில் பாஜக இப்போது ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காக "ஒரு நாள்.. ஒரு பல்கலைக்கழகம்" என்ற திட்டத்தையும் மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

நீட் வினாத்தாள் லீக் உள்ளிட்ட விவரங்களுக்கு எதிராக கடந்த மாதம் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு துளியும் எதிர்பார்க்காத அளவுக்கு இந்த போராட்டத்திற்கு நாடு முழுக்க ஆதரவு கிடைத்தது. இதனால் மத்திய அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலைமை ஏற்பட்டது.

Narendra Modi Gen Z Students

புதிய திட்டம்

இந்தச் சூழலில் தான் இளைஞர்கள், குறிப்பாக Gen Z தலைமுறையினரை கவர பாஜக முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காக "ஒரு நாள்.. ஒரு பல்கலைக்கழகம்" என்ற திட்டத்தையும் மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தினமும் ஒரு மத்திய அமைச்சர் ஒரு பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று மாணவர்களை நேரடியாக சந்திக்க உள்ளார்.

அப்போது மாணவர்கள் தங்கள் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்த அவர்களது கருத்துகளை மத்திய அமைச்சர்களிடம் நேரடியாக தெரிவிக்கலாம். மேலும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்தும் அமைச்சர்கள் நேரடியாக மாணவர்களிடம் எடுத்துரைக்க உள்ளனர்.

பல்கலைக்கழகங்கள்

இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை மத்திய கல்வி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோரிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆகஸ்ட் 19ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் இந்த திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நடந்த மாணவர் போராட்டங்களும், Gen Z இளைஞர்களிடையே உருவாகியுள்ள அதிருப்தியும் தான் மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என்ன நடந்தது

குறிப்பாக, ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை மிக பெரிய அரசியல் சர்ச்சையாக மாறியது. போராட்டக்காரர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தாலும், காயமடைந்த மாணவர்களின் வாக்குமூலங்கள் விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தின.

இந்த போராட்டத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் அரசுக்கு எதிராக கடும் அமளியில் ஈடுபட்டன. மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, அப்போது கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ஜூலை 25ஆம் தேதி பதவி விலகினார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது இளைஞர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

பிரதமர் திட்டம்

வரும் தேர்தல்களில் அவர்கள் சப்போர்ட் முக்கியமாக தேவைப்படும் நிலையில், அவர்களை கவரவே மோடி அரசு இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதற்காகவே பிரதமர் மோடி கூட இளைஞர்களை கவர செல்ஃபி வீடியோவையும் வெளியிட்டிருந்தார். அதன் அடுத்தகட்டமாகவே மத்திய அமைச்சர்களை நேரடியாக பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப மோடி அரசு முடிவு செய்துள்ளது.

சுதந்திர தின உரையிலும் இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை பிரதமர் வெளியிட்டார். இலவச ஆன்லைன் பயிற்சி, ஏஐ திறன் மேம்பாட்டு திட்டம், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அவர் அறிவித்தார். உற்பத்தி, விண்வெளி, அணுசக்தி, செமிகண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வாய்ப்புகள் குறித்தும் அவர் பேசியிருந்தார்.

இதன் நீட்சியாகவே நாடு முழுவதும் சுமார் 1,300 பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அமைச்சர்களை நேரடியாக அனுப்பி கலந்துரையாடலில் ஈடுபட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+