அபார முன்னிலை.. பெரும்பான்மைக்கு தேவையான மேஜிக் நம்பரை தாண்டியது பாஜக கூட்டணி
Recommended Video
டெல்லி: முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை துவங்கியதுமே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கத் தொடங்கியது. இந்த முன்னிலை இதுவரை தொடர்கிறது.
லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியதுமே, தபால் ஓட்டுக்களில் பாஜக தலைமையிலான கூட்டணி முன்னிலை வகிக்கத் தொடங்கியது. 8.05 மணி நிலவரப்படி தே.ஜ.கூட்டணி 16 இடங்களில் முன்னிலை வகித்தது. அதில் 15 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2 இடங்களில் முன்னிலை வகித்தது. அதில் இரண்டுமே காங்கிரஸ் கட்சியின் தொகுதிகள்தான்.

பிறர் எந்த ஒரு தொகுதியிலும் அப்போது லீடிங் பெறவில்லை. ஆம் ஆத்மியும் முன்னிலை பெறவில்லை. காலை 9.15 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 276 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 தொகுதிகளிலும், பிறர் 69 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தனர். பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 272 எம்பிக்கள் தேவை. காலை 9.15 மணிக்கே தேசிய ஜனநாயக கூட்டணி இந்த மேஜிக் நம்பரை தாண்டிவிட்டது. அதில் பாஜக மட்டுமே 229 தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது.
இந்த நிலையில், வர வர நிலை மாறுமா அல்லது இதே மாதிரி இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் இதே நிலைதான் நீடிக்கும் என்பதே முந்தைய தேர்தல் வரலாறு.
எக்ஸிட் போல்களில் பாஜக கூட்டணி முன்னிலை பெறும் என கூறப்பட்ட நிலையில், தற்போதைய துவக்க டிரெண்ட்டும் அதேபோல உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications