"ஷேம்".. என்னங்க இப்படி பண்றாங்க? டெல்லி பறந்த சசிகலா புஷ்பா வீடியோ.. போச்சே! வடக்கில் எகிறிய பிரஷர்
டெல்லி: பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்பி சசிகலா புஷ்பாவின் வீடியோ தற்போது தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது. வடஇந்தியாவில் பலர் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பாஜகவை சேர்ந்தவரும் முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பா மரியாதை செலுத்தினார். அப்போது நடந்த சம்பவம்தான் இணையத்தில் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.
இந்த நிகழ்வின் போது சசிகலா உடல் ரீதியாக தீண்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கான வீடியோ ஆதாரங்களும் வெளியாகி உள்ளன.
ஆனால் இதில் இரண்டு விதமான வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

ஆண்கள்
சசிகலா புஷ்பா அங்கு மரியாதை செய்த போது அப்போது அவரை சுற்றி ஆண்கள் கூட்டம் அதிகம் இருந்தது. அப்போது பின்னால் இருந்து ஒரு கை அவரின் முடியை பிடித்து இழுத்தது. இதனால் வலியில் முகத்தை சுளித்த சசிகலா புஷ்பா முன்னால் நகர்ந்து வந்தார். இதை பயன்படுத்தி அவரை ஒருவரை சீண்ட முயன்றதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சசிகலா புஷ்பாவிற்கு பின்னால் பாஜக மூத்த நிர்வாகி பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி நுழைந்து, பின்னர் அவரின் அருகில் போய் நின்றார்.

இடித்தார்
அவர் சசிகலா புஷ்பாவை இடித்துக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அதோடு சசிகலா புஷ்பாவின் கையை அவர் பிடிக்க முயன்றதாகவும், புடவையை பிடித்து இழுக்க முயன்றதாகவும். கையை வைத்து சசிகலா புஷ்பாவை தொடும்படி சென்றதாகவும் கூறப்படுகிறது. அவரின் கையை சசிகலா புஷ்பா அடுத்தடுத்து தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது. இது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

சர்ச்சை
நேற்று இணையம் முழுக்க இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், வடஇந்தியாவில் இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது. காங்கிரசை சேர்ந்த டெல்லி மூத்த நிர்வாகி ஆல்கா லம்பா இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதில், இந்த வீடியோவில் சசிகலா புஷ்பாவை கிளியராக பாலியல் ரீதியாக சீண்டி உள்ளனர். கேமரா முன்பே பாஜக இப்படி செய்கிறது. இவர்கள்தான் பெண்களை காப்பதாக Beti Bachao Wala என்று கோஷம் போடுவார்கள். பாஜகவை நினைத்தால் அவமானமாக இருக்கிறது. அமைச்சர் ஸ்மிரிதி ராணி இதற்கு பதில் அளிப்பாரா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரஷர்
#ShameOnBJP என்ற டேக்கையும் இவர் பயன்படுத்தி உள்ளார். அந்த பாஜக நிர்வாகி என்னங்க இப்படி பண்றாங்க,. அவரை உடனே நீக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முக்கியமாக அமைச்சர் ஸ்மிரிதி இராணியை டேக் செய்து பலர் இந்த கோரிக்கையை வைத்து வருகின்றனர். தெலுங்கானா, ஆந்திராவிலும் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. வட இந்தியாவில்தான் அதிகமாக வீடியோ டிரெண்டாகி வருகிறது.

பாஜக விளக்கம்
அதேபோல் சமயம் பாஜகவினர் இப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறி உள்ளனர். பாஜக நிர்வாகி கூட்ட நெரிசல் காரணமாக சசிகலா புஷ்பா அவர்களுக்கு உதவி செய்யவே முனைந்திருக்கிறார். இதை தவறாக புனைந்து, கதைகட்டி வீடியோ போட்டு வருகிறார்கள். உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. சசிகலா புஷ்பா புடவையை சரி செய்துகொள்ளவே பாஜக நிர்வாகி உதவினார். வீடியோவை தவறாக சித்தரிக்கிறார்கள் என்று பாஜகவினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications