மத பாகுபாடு இல்லை.. பாகுபாடு காட்டுவதாக பாஜகவின் வாட்ஸ்அப்பில் பதிவிட்ட சாஜியா இல்மி.. விளக்கம்
டெல்லி: பாஜக துணை தலைவர் சாஜியா இல்மி, தன்னை கட்சியின் மாநில தலைவர்கள் ஒதுக்கி வைப்பதாகவும் தன்னிடம் வேறுபாடு காட்டுவதாகவும் பாஜகவின் வாட்ஸ் அப் குரூப்பில் குற்றம்சாட்டி பதிவிட்டிருக்கும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி பாஜக மாநில துணை தலைவராக இருப்பவர் சாஜியா இல்மி. இவர் பாஜகவின் உள் வட்டார வாட்ஸ் அப் குரூப்பில் தன்னை கட்சியின் மாநில தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் ஒதுக்கி வைப்பதாகவும் தன்னிடம் பாகுபாடு காட்டுவதாகவும் பிரச்சனை எழுப்பி உள்ளார்.

மோடி பேரணி
பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற டெல்லி பேரணியில் தனக்கு பாஸ் வழங்கப்படவில்லை என்றும் அதேநேரம் மற்ற தலைவர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.

2017ல் தலைவர்
2015 ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய இல்மி, அப்போதே பாஜகவில் இணைந்திருக்கிறார். 2017ம் ஆண்டு டெல்லி மாநில பாஜகவின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கசிந்துவிட்டது
இந்த பிரச்சனை குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த பிரச்சனையை ஒருபோதும் ஊடகங்கள் மூலம் எழுப்ப விரும்பவில்லை, ஆனால் ஒருவர் உள் வாட்ஸ்அப் குழு சாட்டிங்குகளை கசியவிட்டிருக்கிறார். மத்திய தலைமை இந்த பிரச்சினையை தீவிரமாக அறிந்துள்ளது.

பாஸ் இல்லை
பிரதமர் மோடி கூட்டத்தில் உரையாற்றிய இடத்தில் இருந்த மேடைக்கு செல்ல மற்ற டெல்லி பிரிவு தலைவர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டபோது, சாஜியா இல்மி, ஊடக வளாகத்தில் உட்கார்ந்ததாக கூறப்படுகிறது.

அரசியல் தொடர்பு
"இது ஒரு மத கோணத்தின் மூலம் பார்க்கப்படக்கூடாது என்று தெரிவித்துள்ள இல்மி, டெல்லி மாநில பாஜக அரசியலுடன் தொடர்புடையது என்று விளக்கம் அளித்துள்ளார்.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்











Click it and Unblock the Notifications