Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நன்கொடை.. பாஜகவுக்கு ரூ.477 கோடி! காங்கிரசுக்கு ரூ.74.50 கோடி! வாரி வழங்கிய வள்ளல்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 2020-21ம் நிதியாண்டில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவுக்கு ரூ.477.54 கோடியும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு ரூ.74.50 கோடியும் நன்கொடையாக கிடைத்துள்ளது.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு அமைப்பினர், ஆதரவாளர்கள் நன்கொடைகள் வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இவ்வாறு வழங்கப்படும் உதவிகள் கட்சி நிதியாக இருக்கும்.

தேர்தலுக்கான சட்ட விதிகளின்படி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை பெற்றால் அதுபற்றிய விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

முதலிடத்தில் பாஜக

முதலிடத்தில் பாஜக

அந்த வகையில் கடந்த 2020-21ம் ஆண்டில் தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை விபரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. இதுதொடர்பான விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி அதிக நன்கொடை பெற்ற கட்சிகளில் பாஜக முதலிடத்திலும், காங்கிரஸ் கட்சி 2வது இடத்திலும் உள்ளது.

பாஜக, காங்கிரசுக்கு எவ்வளவு?

பாஜக, காங்கிரசுக்கு எவ்வளவு?

பாஜகவை பொறுத்தமட்டில் 2020-21 நிதியாண்டில் ரூ.477 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரத்து 077யை நன்கொடையாக பெற்றுள்ளது. பாஜகவுக்கு மொத்தம் 2,206 பேரிடம் இருந்து நன்கொடை கிடைத்துள்ளது. இந்த ஒரு ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.74 கோடியே 50 லட்சத்து 49 ஆயிரத்து 731 நன்கொடையாக கிடைத்துள்ளது.காங்கிரஸ் கட்சிக்கு 1,059 பேர் நன்கொடை வழங்கி உள்ளனர்.

மம்தா கட்சிக்கு எவ்வளவு?

மம்தா கட்சிக்கு எவ்வளவு?

இதேபோல் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 26 பேரிடம் இருந்து ரூ.42.51 கோடியும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 79 பேரிடம் இருந்து ரூ.26.26 கோடியும், 226 பேரிடம் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.12.85 கோடியும் நன்கொடையாக கிடைத்துள்ளது. இருப்பினும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு நன்கொடை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் 2வது ஆண்டாக விபரங்கள் வழங்கப்படவில்லை.

கடந்த ஆண்டை விட குறைவு

கடந்த ஆண்டை விட குறைவு

2020-21ம் ஆண்டில் அனைத்து தேசிய கட்சிகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.633.66 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 75 சதவீதத்தை பாஜகவும், 11 சதவீதத்தை காங்கிரஸ் கட்சியும் பெற்றுள்ளன. இருப்பினும் 2019-20 நிதியாண்டை ஒப்பிடும்போது கட்சிகளுக்கான நன்கொடைகள் குறைந்துள்ளது. 2019-20 காலக்கட்டத்தில் தேசிய கட்சிகளுக்கு 6,363 பேரிடம் இருந்து,013.80 கோடி நன்கொடையாக கிடைத்து இருந்தது. இதில் 2019-20ல் பாஜக 785.77 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.139.01 கோடியும் பெற்றிருந்தது. தற்போது இந்த கட்சிகளின் நன்கொடைகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில கட்சி வருமானத்தில் திமுக முதலிடம்

மாநில கட்சி வருமானத்தில் திமுக முதலிடம்

முன்னதாக அரசியல் கட்சிகளின் வருமானம் குறித்த அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR) வெளியிட்டு இருந்தது. கடந்த ஆண்டில் நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டிய மாநில கட்சியாக திமுக இடம்பெற்றிருந்தது. அதாவது 2020-21ல் திமுக ரூ.149.95 கோடிக்கு வருமானம் ஈட்டியது. 2வது இடத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்த கட்சி ரூ.107.99 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. ஒடிசாவின் பிஜூ ஜனதாதாளம் கட்சி ரூ.73.34 கோடியுடன் 3வது இடத்திலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி ரூ.65 கோடியுடன் 4வது இடத்திலும், டிஆர்எஸ் கட்சி ரூ.37.65 கோடியுடன் 5வது இடத்திலும், அதிமுக ரூ.34 கோடியுடன் 6வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+