400+ மைல்கல்லை எட்டும் பாஜக.. பாஜகவினரை துள்ளிக் குதிக்க வைத்த India TV- CNX எக்ஸிட் போல் முடிவுகள்!
டெல்லி: பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 401 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாக இந்தியா டிவி - சி.என்.எக்ஸ் எக்ஸிட் போல் முடிவு தெரிவிக்கிறது. வேறு எந்த எக்ஸிட் போல் கணிப்பும் பாஜக அணி 400+ இடங்கள் பெறும் என கணிப்பு வெளியிடாத நிலையில் India TV - CNX கணிப்பு பாஜக 400- ஐ தொட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இன்று ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து வரும் ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மக்களவைத் தேர்தல் முடிவுக்கு வந்துள்ள இந்த நேரத்தில், யார் அடுத்த பிரதமர் என்று கணிக்கப்பட்டு வருகின்றன. இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவுக்கு பின் வாக்காளர்களிடம் நடத்தப்படும் கணக்கெடுப்பு மற்றும் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் வெளியிடப்படும் தகவல் Exit Polls.
பல்வேறு ஊடக நிறுவனங்கள் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியா டிவி - சி.என்.எக்ஸ் எக்ஸிட் போல் முடிவுகள், பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 401 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் பாஜக கூட்டணி 371 முதல் 401 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், இந்தியா கூட்டணி 109 முதல் 139 இடங்கள் வரை மட்டுமே வெல்லக்கூடும் என்றும், மற்ற கட்சிகள் 28 - 38 சீட்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் India TV - CNX கணிப்பு தெரிவிக்கிறது.
இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைத் தாண்டும் என பாஜக தலைவர்கள் மிகத் தீவிரமாக பரப்புரை செய்தனர். எனினும், வாக்குப்பதிவு ஒவ்வொரு சுற்றுகளாக நடந்து வந்த நிலையில், பாஜக தலைவர்கள் 400 இடங்களில் வெல்வோம் எனக் கூறுவதை குறைத்துக் கொண்டனர்.
பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையை இழந்துள்ளது, அதனால் தான் சமீபகாலமாக 400+ சீட் வெற்றி என்ற முழக்கத்தைக் கைவிட்டு, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்து விடுவார்கள், இதைச் செய்து விடுவார்கள் என பயமுறுத்தி வருகிறது என இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 401 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாக இந்தியா டிவி - சி.என்.எக்ஸ் எக்ஸிட் போல் முடிவு தெரிவித்திருப்பது பாஜகவினருக்கு உற்சாகம் கொடுத்துள்ளது. கடந்த முறை பாஜக தனித்து 303 இடங்களை வென்ற நிலையில் இந்த முறை அதைவிட அதிகமாக வெல்லும் என இந்தியா டிவி - சி.என்.எக்ஸ் எக்ஸிட் போல் தெரிவிக்கிறது.
ஜன் கி பாத் நிறுவனம் நடத்திய எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளின்படி, பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 362 - 392, இந்தியா கூட்டணி 141 - 161 இடங்களையும் வெல்ல வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 400-ஐ நெருங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications