மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி... 283 தொகுதிகளை வெல்லும்.. டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தகவல்
Recommended Video

டெல்லி:லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 283 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பிரபல ஆங்கில தொலைக்காட்சி நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
பிரபல தொலைக்காட்சியான டைம்ஸ் நவ்வும், விஎம்ஆர் நிறுவனமும் இணைந்து இந்த கருத்து கணிப்பை நடத்தின. கருத்துக் கணிப்பு முடிவுகளை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
அதில் பாஜக கூட்டணிக்கு 283 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் கூட்டணிக்கு 135 இடங்களே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 125 தொகுதிகளை மற்ற கட்சிகள் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

உ.பி.நிலவரம்
அதில் ஒவ்வொரு மாநிலம் வாரியாக லோக்சபா தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று வெளியிட்டது. அந்த கணிப்புகளில் அனைவரும் எதிர்பார்த்த உத்தரப்பிரதேச மாநில கருத்து கணிப்புகளும் அடங்கும்.

பாஜகவுக்கு 42 தொகுதிகள்
அதில் அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பாஜக கூட்டணி 42 இடங்களை கைப்பற்றும். மாயாவதி, அகிலேஷ் கூட்டணி 36 தொகுதிகளை வெல்லும், காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணிக்கு ஆதரவு
ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 20 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 5 தொகுதிகளும் கிடைக்கும்.சத்தீஸ்கர் மாநிலத்தில் 11 தொகுதிகளில் பாஜக கூட்டணி 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு 5 தொகுதிகள்
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 5 தொகுதிகளையும் பாஜக கூட்டணி வெல்லும் என்று அந்த கருத்து கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில் பாஜகவுக்கு கூட்டணிக்கு 22 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு வெறும் 7 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பாஜக
தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக கூட்டணி அமோகமாக கைப்பற்றும். ஆம் ஆத்மி உள்ளிட்ட மற்ற கட்சிகள் படுதோல்வி அடையும் என்று கூறப்பட்டுள்ளது.

அரியானாவில் வெற்றி
அரியானாவில் 10 தொகுதிகளில் 8 தொகுதிகள் பாஜக கூட்டணிக்கும், 2 தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் காங்கிரஸ் கூட்டணிக்கு 13 தொகுதிகளிலும், பாஜக கூட்டணிக்கு 17 தொகுதிகளும் கிடைக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications