பாஜகவின் புது வியூகம்.. டெல்லியை வெல்ல கம்பீரை களம் இறக்கத் திட்டம்!
டெல்லி: டெல்லியில் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீரை களம் இறக்க பாஜக திட்டமிட்டு வருகிறதாம்.
மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக பிரம்மபிரயத்தனம் செய்து வருகிறது. அதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வகையான வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி இருந்தது. ஆனால் இம்முறை 7 தொகுதிகளையும் கைப்பற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பதை பாஜக புரிந்து வைத்துள்ளது.

டெல்லியில் இம்முறை ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நடக்கவுள்ளது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியை சமாளிக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது சில பிரபலங்களை நிறுத்தினால் டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசை சமாளிக்க முடியும் என அக்கட்சி கருதுகிறது.
இதனால் புது டெல்லி தொகுதியில் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை களம் இறக்க பாஜக முயற்சித்து வருகிறது. கவுதம் காம்பீர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார். அதன் பிறகு அரசியல் மற்றும் பொது விசயங்கள் குறித்து சமூக வலைதளங்களில் தனது கருத்தை பதிந்து வருகிறார்.
கடந்த மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் அமித்சரசில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர் அருன்ஜெட்லிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட காம்பீர் ஆம் ஆத்மி கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட காம்பீர் ஆம் ஆத்மியின் ஒவ்வொரு செயல்பாட்டையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மிக மோசமான ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட்டில் இருந்து 2016 ம் ஆண்டு கழட்டி விடப்பட்டார். அதன் பின்னர் உள்ளூர் போட்டிகளிலும், வர்ணனையும் செய்து வருகிறார்.
இவர் புது டெல்லியில் போட்டியிட உள்ளதால் தற்போதைய சிட்டிங் எம்.பி யான மீனாட்சி லேகிக்கு வேறு தொகுதியை பாஜக ஒதுக்க உள்ளது. தற்போது இவரை எப்படியாவது களம் இறக்குவது என்று பாஜக தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில்தான் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications