பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பாஜக மலைபோல் நம்பும் தென்மாநில கட்சிகள்... லிஸ்ட்டில் திமுகவும்!
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவை பாஜக கேட்கும் முடிவில் இருக்கிறது. திமுகவிடமும் பாஜக ஆதரவை கேட்கக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
கடந்த தேர்தலில் 282 தொகுதிகளைப் பெற்று பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் இம்முறை நிச்சயம் பாஜகவுக்கு இத்தனை இடங்கள் கிடைக்காது என்பதே பெரும்பாலான கருத்து கணிப்புகளின் முடிவுகள்.

உ.பி. கூட்டணி
மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் உத்தரப்பிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் நிற்கின்றன. இதனால் பாஜகவுக்கு உத்தரப்பிரதேசத்தில் பின்னடைவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

பாஜக ப்ளான்
இதனால் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைப் பாஜகவால் பெற இயலாமல் போகும் என்பது யதார்த்தம். அப்படி ஒரு சூழ்நிலை வரும் நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவை பாஜக கோர திட்டமிட்டுள்ளது.

திமுக ஆதரவை கோரும் பாஜக
தேவைப்பட்டால் திமுகவின் ஆதரவையும் பாஜக கேட்கும் முடிவில் இருக்கிறது. இந்த 4 கட்சிகளும்தான் திட்டவட்டமான பாஜக எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. மோடிக்கு பதிலாக வேறு ஒருவரை பாஜக பிரதமராக முன்மொழிந்தால் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரிக்க வாய்ப்பு இருக்கின்றன.

எதிர்க்கட்சிகள் லிஸ்ட்
திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி ஆகியவை பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருக்கின்றன. இதனால் இக்கட்சிகளின் ஆதரவை பாஜக நிச்சயம் கேட்கப் போவதில்லை என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications