டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடங்க மாட்டாங்க போல இருக்கே... "தேசியவாதி கோட்சே" என புகழ்ந்த பாஜக பெண் எம்எல்ஏ!

Google Oneindia Tamil News

டெல்லி: இவங்க அடங்க மாட்டாங்க போல இருக்கே... நாதுராம் கோட்சே ஒரு தேசியவாதி என்று இன்னொரு பாஜக பெண் எம்எல்ஏ கருத்து சொல்லி உள்ளார்!

இப்பவெல்லாம் நாடு முழுக்க ஓவர் நைட்டில் ஃபேமஸ் ஆகணும்னு நினைச்சால், கோட்சே பத்தி பேசினால் போதும் போல இருக்கு. அப்படித்தான் இருக்கிறது சில பாஜக நபர்களின் செயல்பாடுகள்.

முதன்முதலில் இந்த விஷயத்தை ஆரம்பித்து வைத்ததே கமல்தான். பிரச்சாரத்துக்கு பள்ளப்பட்டிக்கு போன இடத்தில், "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர்தான் நாதுராம் கோட்சே" என்று சொன்னதிலிருந்து ஆரம்பமானது வினை!

ஆரணி சுற்றுவட்டாரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழை.. 70,000 வாழை மரங்கள் நாசம்.. விவசாயிகள் கண்ணீர் ஆரணி சுற்றுவட்டாரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழை.. 70,000 வாழை மரங்கள் நாசம்.. விவசாயிகள் கண்ணீர்

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

பள்ளப்பட்டியில் பேசிய கமலுக்கு நாட்டின் ஓரிடத்தில் எங்கேயோ இருந்த பிரக்யா தாக்கூர் வந்து "கோட்சேவை தேசியவாதி" என்று பதிலடி தந்தார். அதுவரை கமலை வறுத்தெடுத்தவர்கள், உடனே பிரக்யாவை பிடித்து கொண்டு உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்கள்.

உஷா தாகூர்

உஷா தாகூர்

இப்போது திரும்பவும் ஒரு பாஜக பெண் எம்எல்ஏ கோட்சே பற்றி கருத்து சொல்லி உள்ளார். அவர் பெயர் உஷா தாகூர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள டாக்டர். அம்பேத்கர் நகர் பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். ஒரு கூட்டத்தில் பேசும்போது சொன்னதாவது:

தேசியவாதி

தேசியவாதி

"ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் தேசத்தை பற்றி அக்கறை கொண்டவர் கோட்சேதான். மகாத்மா காந்தியை கொலை செய்யும் அந்த முடிவை அவர் எந்த சூழ்நிலையில் எடுத்திருப்பார் என்பது கோட்சேவுக்கு மட்டுமே தெரியும். அதனால் நாம அதுகுறித்து எந்த கருத்தும் சொல்ல முடியாது. அவர் ஒரு தேசியவாதி" என்று சகட்டுமேனிக்கு புகழ்ந்தார்.

வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ

வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ

என்ன எதிர்பார்த்து பேசினாரோ, அதன்படியே அவரது பேச்சின் வீடியோவும் வைரலாகி சர்ச்சையாக ஆரம்பித்துள்ளது. நாட்டு மக்களுக்கு விஷம கருத்துக்களை பரப்பும் பிரக்யா தாகூர், உஷா தாகூர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. அதே போல உஷா தாகூரையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று முழக்கம் எழுந்துவருகிறது. ஆனால் பாஜகவோ ஆனால், அது வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ என்று ஒற்றை பதிலை சொல்லி விட்டது!

English summary
MadhyPradesh BJP MLA Usha Tagore has praised that Nathuram Godse a nationalist
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X