முடிந்தவரை போராடினோம்.. தோல்வியை ஏற்கிறோம்.. கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்.. எம்பி கவுதம் காம்பீர்
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியையும் பாஜகவின் தோல்வியையும் ஒப்புக் கொள்கிறேன் அக்கட்சிக்கு எனது வாழ்த்துகள் என கிழக்கு டெல்லியின் எம்பி கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 8-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 70 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு 36 இடங்களை பெற்றால் பெரும்பான்மை பலம் கிடைத்துவிடும்.
ஜஸ்ட் பாஸ் மார்க் என சொல்லப்படும் 36 சீட்டுகளுக்காக பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியிடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. இதில் 65 இடங்களுக்கு மேல் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது.

கருத்து
இதனால் கருத்து கணிப்புகளின் படி ஆம் ஆத்மியே வெற்றி பெறும் நிலை உள்ளது. இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து பாஜகவின் கிழக்கு டெல்லி எம்பி கவுதம் காம்பீர் செய்தியாளர்களிடம் தனது கருத்தை தெரிவித்தார். அவர் கூறுகையில் டெல்லி தேர்தல் முடிவுகளை ஏற்கிறோம். அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி மக்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

சர்ச்சை
எங்களால் முயன்றதை செய்தோம். எனினும் எங்களால் டெல்லி மக்களை திருப்திப்படுத்த முடியவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமையில் டெல்லி வளர்ச்சி பெறும் என நம்புகிறேன் என காம்பீர் தெரிவித்தார். கிரிக்கெட் வீரரான காம்பீர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தான் பாஜகவில் இணைந்தார். அவர் பிரசாரம் செய்ததிலிருந்தே சர்ச்சைதான்.
|
ஜிலேபி
அண்மையில் காற்று மாசு குறித்து நாடாளுமன்றத்தில் ஆலோசனை நடைபெற்ற போது டெல்லியின் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் கலந்து கொள்ளாமல் இந்தியா- வங்கதேசம் இடையேயான கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக சென்றுவிட்டார். மேலும் டெல்லி மக்கள் சுவாசிக்கக் கூட சுத்தமான காற்று இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் ஜிலேபி சாப்பிடுவது போல் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.

பொறுப்பில்லாத காம்பீர்
இதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் காம்பீர் எங்கே என கேட்டு போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். இதற்கு பதிலளித்த காம்பீர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே கிரிக்கெட் வர்ணனைக்கு பணம் பெற்று ஒப்பந்தம் செய்து கொண்டேன். அதனால்தான் என்னால் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. நான் ஜிலேபி சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் டெல்லியில் காற்று சுத்தமாகிவிடுமா என கொஞ்சமும் பொறுப்பில்லாமல் கேள்வி எழுப்பினார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான்












Click it and Unblock the Notifications