'ரேப் இன் இந்தியா'.. எங்களை பலாத்காரம் செய்வதை ராகுல் காந்தி வரவேற்கிறாரா.. பாஜக பெண் எம்பி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எங்களை பலாத்காரம் செய்வதை ராகுல் காந்தி வரவேற்கிறாரா என்று ஆவேசமாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய பாஜக பெண் எம்பி லக்கெட் சாட்டஜி, ராகுல் காந்தியின் ரேப் இன் இந்தியா கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்தியாவில் தயாரிப்போம் என்பதை தெரிவிக்கும் விதமாக மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். இதை அப்படியே மாற்றி, தற்போது ரேப் இன் இந்தியாவாக உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

BJP MP Locket Chatterjee condemns in Lok Sabha on Rahul Gandhis rape in India remark

நாட்டில் அண்மைக் காலமாக நடந்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்களை குறிப்பிட்டு இப்படி பேசியிருந்தார். இதற்கு எதிராக பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டத்தால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில் லோக்சபாவில் இன்று எழுந்து நின்று ராகுல் காந்தியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து பேசிய பாஜக பெண் எம்பி லாக்கெட் சாட்டர்ஜி, "பிரதமர் மோடி 'மேன் இன் இந்தியா' என்று கூறிவருகிறார்.

ஆனால் ராகுல் காந்தியோ 'ரேப் இன் இந்தியா' என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் ராகுல் காந்தி எங்களை (பெண்களை) யார் வேண்டுமானாலும் கற்பழிக்கலாம் என்பதை வரவேற்கிறாரா.. இப்படி பேசியதன் மூலம் ராகுல் காந்தி ஒட்டுமொத்த இந்திய பெண்களையும் அவமதித்துவிட்டார். பாரத மாதாவையும் அவமரியாதை செய்துவிட்டார்" என்று கூறினார்.

இதனிடையே ராகுல் காந்தி நாட்டில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், தான் மன்னிப்பு கேட்க போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+