கோழி அமுக்குவது போல்.. லோக்சபாவில் நுழைந்த நபரின் கழுத்தை பிடித்த பாஜக எம்பி! யார் இவர் தெரியுமா?
டெல்லி: டெல்லி புதிய நாடாளுமன்ற கட்டத்தில் இன்று குளிர்கால கூட்டத்தொடரில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர் திடீரென்று லோக்சபா அரங்குக்குள் நுழைந்து மஞ்சள் நிற புகையை வெளியேற்றும் குண்டுகளை வீசினர். இதனால் எம்பிக்கள் அனைவரும் பதற்றத்தில் சிதறி ஓடிய நிலையில் பாஜக எம்பி ஒருவர் துணிச்சலாக மர்மநபர் ஒருவரின் கழுத்தை அமுக்கி பிடித்து ஹீரோவானார்.
டெல்லியில் புதிதாக நாடாளுமன்ற கட்டடம் கடட்ப்பட்டுள்ளது. தற்போது அங்கு தான் குளிர்கால கூட்டத்தொடர் என்பது நடந்து வருகிறது. இன்று காலையில் வழக்கம்போல் லோக்சபா, ராஜ்யசபாக்கள் துவங்கின. இந்நிலையில் தான் திடீரென்று லோக்சபாவுக்குள் 2 பேர் நுழைந்தனர்.

அதாவது லோக்சபாவின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர் திடீரென்று லோக்சபா அரங்குக்குள் குதித்தனர். அவர்கள் மஞ்சள் நிற புகையை வெளியேற்றும் புகையை அடித்தபடி லோக்சபாவின் சபாநாயகர் இருக்கையை நோக்கி வேகமாக சென்றனர்.
லோக்சபாவில் எம்பிக்கள் அமர்ந்திருக்கும் மேஜை மீது ஏறி அவர்கள் வேகமாக முன்னோக்கி சென்றனர். இதனால் எம்பிக்கள் அனைவரும் பதறியடித்து ஓடினர். . ஆனால் பாஜக எம்பி ஆர்கே சிங் படேல் துணிச்சலாக மர்மநபர் ஒரு நபரின் அருகே ஓடிச்சென்று மடக்கி அவரது கழுத்தை பிடித்து நிறுத்தினார். அதன்பிறகு மற்ற எம்பிக்கள் அவருக்கு உதவி செய்ய அந்த நபர் உடனடியாக பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
#WATCH | An unidentified man jumps from the visitor's gallery of Lok Sabha after which there was a slight commotion and the House was adjourned. pic.twitter.com/Fas1LQyaO4
— ANI (@ANI) December 13, 2023
இப்படி துணிச்சலாக செயல்பட்ட இந்த ஆர்கே சிங் படேல் உத்தர பிரதேச மாநிலம் பாண்டா தொகுதி எம்பியாக உள்ளார். இவர் சமாஜ்வாதி கட்சியில் செயல்பட்டு வந்தார். இவர் உத்தர பிரதேசத்தில் அமைச்சராக பணியாற்றி இருந்தார். அதன்பிறகு பாஜகவில் நுழைந்தார். கடந்த 2019 ம் ஆண்டு பாண்டா தொகுதியில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது தந்தை பெயர் சுனில் படேல். அவர் பாஜகவின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தான் இந்த புகை குண்டுகளை போட்ட நபர்கள் கர்நாடகா மாநிலம் மைசூர்-குடகு நாடாளுமன்ற தொகுதியின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் பாஸ் பெற்று லோக்சபாவுக்குள் பார்வையாளர்களாக சென்றததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications