"இந்துக்களாக மதமாற்றம்" செய்ய அறைகூவல் விடுத்த பாஜக எம்.பி. தேஜஸ்வி.. எதிர்ப்பு கிளம்பியதும் பல்டி
டெல்லி: இந்து மதத்தை விட்டு வெளியேறியவர்கள் அனைவரும் மீண்டும் மதமாற்றம் செய்யப்படுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கூறியது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அந்த கருத்துகளை அவர் வாபஸ் பெற்றுக் கொண்டார்.
உடுப்பியில் கிருஷ்ண மடத்தில் நடந்த விஷ்வார்ப்பனம் என்ற நிகழ்ச்சியில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கலந்து கொண்டார். அவர் பேசுகையில் இந்து மதத்தை விட்டு வெளியேறிய அனைவரையும் மீண்டும் மதம் மாற்றுவது மட்டுமே இந்துக்களுக்கு இருக்கும் ஒரே வழி.

அதில் பாகிஸ்தான் முஸ்லிம்களும் அடங்குவார்கள். சமூக, அரசியல் பொருளாதார காரணங்களுக்காக இம்மதத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானவர்கள் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும். பாகிஸ்தான் பூகோலத்தில் நாம் திரும்பவும் இடம் பெற வேண்டும்.
370 சட்டப்பிரிவை நீக்கிவிட்டு ராமர் கோயிலை கட்டுவதால் இது நடைபெற சாத்தியமில்லாதது போல் இருக்கலாம். இந்த தாய் மதம் திரும்பும் திட்டத்தை கர்நாடகா மாநிலத்தில் இருந்து தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் தென்னிந்தியாவில் முகலாயர்கள் உள்ளிட்டோரை ஊடுருவ விடாமல் தடுத்து நிறுத்திய வரலாறு கர்நாடகாவுக்கு உண்டு.
மக்களை இந்து மதத்திற்கு கொண்டு வர ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு மடமும் ஆண்டுதோறும் இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும் என தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார். இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ பிரியங்கா கார்கே கூறுகையில் பாஜகவின் விருப்பம் போல் ஒவ்வொருவரும் தாய் மதம் திரும்பினால், வர்னா முறையில் எப்படி பிரிப்பார்கள்? இல்லை அனைவரையும் பிராமணர்களாக கருதுவார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகா சட்டசபையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா தாக்கல் நிறைவேற்றப்பட்டது. கர்நாடகாவில் கட்டாய மத மாற்றத்தை தடுக்கும் நோக்கத்தில் கர்நாடகா மத சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரு தினங்கள் கழித்து தேஜஸ்வி சூர்யா கட்டாய மத மாற்றம் குறித்து முரண்பாடான தகவலை தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் இன்று காலை தனது கருத்தை வாபஸ் பெற்றுள்ளார். அதில் 2 நாட்களுக்கு முன்பு உடுப்பி கிருஷ்ணர் மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினேன்.
அப்போது நான் தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. எனவே நான் கூறிய கருத்துகளை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்றார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications