’டார்கெட் 370’ லோக்சபா தேர்தல் வியூகம்.. டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து பாஜக நிர்வாகிகள் 11,500 பேர் பங்கேற்றனர். பிரதமர் மோடி, ஜேபி நட்டா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். நாளை நடக்கும் தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே எஞ்சியுள்ளன. தேர்தல் தேதியும் இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகின்றன. இதற்காக இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டன.

BJP national council meet in Delhi today and tomorrow Around 11,500 delegates to attend

எனினும், தொகுதி பங்கீட்டின் போது ஏற்பட்ட சிக்கலால் இந்தியா கூட்டணியில் இருந்து முக்கிய கட்சிகள் வெளியேறியுள்ளன. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனினும், பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தனது கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. தேர்தல் பரபரப்பு உச்சத்தை தொட்டுள்ள நிலையில், பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று தொடங்கியது.

இந்த கூட்டத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தொடக்க நிகழ்ச்சி உரை நிகழ்த்த உள்ளார். இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் இந்த கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி நாளை இந்த கூட்டத்தில் பங்கேற்று நிறைவு உரை நிகழ்த்த உள்ளார். லோக்சபா தேர்தலில் 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என வியூகம் வகுத்து வரும் பாஜக, இந்தக் கூட்டத்தில் இதுதொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.

இந்த கூட்டத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தொடக்க நிகழ்ச்சி உரை நிகழ்த்த உள்ளார். இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் இந்த கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. ரதமர் மோடி நாளை இந்த கூட்டத்தில் பங்கேற்று நிறைவு உரை நிகழ்த்த உள்ளார். லோக்சபா தேர்தலில் 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என வியூகம் வகுத்து வரும் பாஜக, இந்தக் கூட்டத்தில் இதுதொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+