டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே வருடத்தில் வந்து குவிந்த நன்கொடை... முதலிடம் பிடித்தது பாஜக.. எவ்வளவு தெரியுமா?

கடந்த 2017-18 நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.1000 கோடி நன்கொடை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 2017-18 நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.1000 கோடி நன்கொடை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா தாக்கல் செய்துள்ள வருமானவரித்துறை ரிட்டனில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக நன்கொடைகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் வருமான வரித்துறை ரிட்டனை தாக்கல் செய்துள்ளன. இதில், ரூ.1000 கோடிக்கும் அதிகமாக நன்கொடைகளைப் பெற்று மற்ற கட்சிகளை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் பாஜக உள்ளது.

மற்ற கட்சிகள்

மற்ற கட்சிகள்

தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலமாக பாஜகவுக்கு ரூ.210 கோடி கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ரூ.717 கோடி நன்கொடை வந்துள்ளதாக ரிட்டன் தாக்கல் செய்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி கடந்த 2016-17-ம் ஆண்டு 681 கோடி ரூபாய் மட்டுமே பெற்று இருந்தது. கடந்த 2016-17-ம் ஆண்டு ரூ.262 கோடி வருவாய் வந்ததாகத் தெரிவித்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வருவாய் ரூ.291 கோடியாக உயர்ந்துள்ளது.

மீதம்

மீதம்

2017-18 நிதியாண்டில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ரூ.104 கோடி நன்கொடை வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இதுவரை வருமானவரி ரிட்டன் அறிக்கையைத் தாக்கல் செய்யாத காங்கிரஸ் கட்சி விரைவில் தாக்கல் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக அதிகம்

பாஜக அதிகம்

மேலும், இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் நிதிப்பத்திரங்கள் வெளியீட்டில் அதிகமான நிதியாக ரூ.210 கோடி பாஜகவுக்கு கிடைத்துள்ளது. அரசு வங்கிகள் மூலம் ரூ.222 கோடிக்குத் தேர்தல் நிதிப்பத்திரங்கள் வெளியிட்டது. அதில் 95 சதவீதம் பாஜகவுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

532 கோடி

532 கோடி

முன்னதாக, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் 2016-2017 நிதி ஆண்டில் 20,000 ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை பெற்ற தேசிய அரசியல் கட்சிகள் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 1,194 நன்கொடைகள் பாஜக பெற்றதாகவும் அவற்றின் மதிப்பு 532 கோடி ரூபாய் என்று பாஜக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Bharatiya Janata Party (BJP) have been received over Rs 1,000 crore donations in 2017-18.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X