Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேள்வி கேட்ட அகிலேஷ் யாதவுக்கு.. பதிலடி கொடுத்து.. கையெடுத்து கும்பிட வைத்த அமித்ஷா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகிலேயே பெரிய கட்சி என்று பெருமைப்படும் பாஜகவால் இன்னும் சொந்த கட்சிக்கே தலைவரை தேர்வு செய்ய முடியவில்லை என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் சிரித்தபடி பாஜகவை சீண்டினார். அதனை கேட்டு மத்திய உள்துறை அமைச்சர் உள்பட அனைவரும் சிரித்தனர். அதன்பிறகு அமித்ஷா எழுந்து சிரித்தபடி சொன்ன பதிலால் அகிலேஷ் யாதவ் ‛ஆளை விடுங்கப்பா சாமி' என்று அவரை நோக்கி கையெடுத்து கும்பிட்டது லோக்சபாவில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இன்று வக்ஃபு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் உள்பட பிற எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

bjp-president-row-akhilesh-yadav-and-amit-shah-engage-in-banter-during-waqf-bill-debate-and-everyon

இந்த எதிர்ப்புக்கு நடுவே வக்ஃபு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு மசோதா மீதான விவாதம் என்பது பரபரப்பாக நடந்தது. ஆனால் அதற்கு முன்பாக லோக்சபாவில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. இதனால் மொத்த லோக்சபா எம்பிக்களும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.

இந்த சிரிப்புக்கு காரணமே பாஜக தேசிய தலைவர் நியமனம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இடையே நடந்த காரசார விவாதம் தான். அதாவது பாஜக தேசிய தலைவர் நியமனம் தொடர்பாக அகிலேஷ் யாதவ் கேள்வி கேட்ட நிலையில் அதற்கு அமித்ஷா எழுந்து பதிலளித்தார். இந்த பதிலை கேட்ட அகிலேஷ் யாதவ், அமித்ஷாவை நோக்கி கையெடுத்து கும்பிட்டது லோக்சபாவில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அதாவது லோக்சபாவில் அகிலேஷ் யாதவ் எழுந்து, ‛‛பாஜக தன்னை உலகிலேயே பெரிய கட்சி என்று அடையாளப்படுத்தி கொள்கிறது. ஆனால் இன்னும் கூட தேசிய தலைவரை தேர்வு செய்ய முடியாமல் தவித்து வருகிறது'' என்று கூறி சிரித்தார். அதனை கேட்டு எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி பாஜக எம்பிக்களும் சிரித்தனர். முதல் வரிசையில் அமர்ந்து இருந்த அமித்ஷாவும் வாய்விட்டு சிரித்தார்.

மேலும் அமித்ஷா, அகிலேஷ் யாதவை நோக்கி, ‛‛நான் பதிலளிக்கிறேன்'' என்ற வகையில் கை சைகை செய்து காண்பித்தார். இதையடுத்து சிரித்தபடி அகிலேஷ் யாதவ் தனது இருக்கையில் அமர்ந்தார். அதன்பிறகு சிரித்தபடி எழுந்த அமித்ஷா, ‛‛அகிலேஷ் ஜி சிரித்தபடி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். இதனால் நானும் அதே பாணியில் அவருக்கு பதிலளிக்க விரும்புகிறேன். என் முன்னால் அனைத்து கட்சிகளும் உள்ளன. மேலும் கட்சிகளின் தேசிய தலைவர்களும் உள்ளனர். இந்த தலைவர்கள் அனைவரும் குடும்பத்தின் 5 உறுப்பினர்கள் மூலம் தேர்வுசெய்யப்பட்டவர்கள்.

ஆனால் எங்கள் கட்சி அப்படியில்லை. எங்கள் கட்சியின் 12 முதல் 13 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் தலைவர் தேர்வு நடைமுறையில் இயல்பாகவே காலம் பிடிக்கும். உங்களை போல் தலைவரை தேர்வு செய்தால் அதிக நேரம் எடுக்காது. மேலும் நான் ஒன்றை சொல்கிறேன். நீங்கள் நினைத்தால் உங்கள் கட்சியில் 25 ஆண்டு காலம் தலைவராக பொறுப்பு வகிக்க முடியும்'' என்றார். அதாவது பாஜகவில் ஒரு குடும்பத்தினர் தலைவரை தேர்வு செய்வது இல்லை. ஆனால் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளில் குடும்பத்தினர் தலைவரை தேர்வு செய்கின்றனர் என்பதை அமித்ஷா இப்படி கூறியிருந்தார்.

இதனை புரிந்து கொண்ட அகிலேஷ் யாதவ் தனது இருக்கையில் அமர்ந்து சிரித்தபடியே அமித்ஷாவை நோக்கி கையெடுத்து கும்பிட்டார். இதனை பார்த்த எம்பிக்கள் அனைவரும் சிரித்தனர். அமித்ஷாவும் சிரித்தார். அகிலேஷ் யாதவ் - அமித்ஷா இடையே நடந்த இந்த விவாதம் லோக்சபாவில் அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+