மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் 2 வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மத்திய அமைச்சர்களுக்கே ட்விஸ்ட்
டெல்லி: மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைமை வெளியிட்டுள்ளது. தற்போது 39 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெற போகிறது. இம்மாநிலங்களில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று விரும்பும் பாஜக, ஆதற்காக தீவிரமாக தயராகி வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுவிட்டது.

இதேபோல் மத்திய பிரதேசத்திற்கு முதற்கட்டமாக 37 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை ஆகஸ்ட் 17ஆம் தேதி பாஜக வெளியிட்டது. இந்நிலையில் இன்று 37 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது. அதன்பின்னர் இந்தபட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 39 வேட்பாளர்களைக் கொண்ட பாஜகவின் இரண்டாவது பட்டியலில் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பெயர் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சர்கள் ஃபகன் சிங் குலாஸ்தே மற்றும் படேல் பிரஹலாத், எம்.பி.க்கள் கணேஷ் மந்திரி, ராகேஷ் சிங் மற்றும் ரீத்தி பதக் ஆகியோரும் மத்திய பிரதேசத்தின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
மத்தியப் பிரதேச சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 76 இடங்களுக்கு பாஜக வேட்பாளர்களை இதுவரை அறிவித்துள்ளது. முன்னதாக, பாஜகவின் தேர்தல் பிரசாரத்தை துவக்குவதற்காக, மத்திய பிரதேச மாநிலத்திற்கு பிரதமர் மோடி நேற்று காலை சென்றிருந்தார்.
அம்மாநில தலைநகர் போபாலில் 'கார்யகர்த்தா மஹாகும்ப்' என்ற பெயரில் நடந்த பாஜ கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியை துருப்பிடித்த இரும்பு என்றும் நகர்ப்புற நக்சல்களால் அவுட்சோர்ஸ் செய்யப்படுவதாகவும் பிதமர் மோடி விமர்சித்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைத்தால், இந்த மாநிலத்தை மிகவும் பின்தங்கிய மாநிலமாக காங்கிரஸ் தள்ளிவிடும் என்றும் எச்சரித்தார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications