PM சீட்டில் “சாய் வாலா”.. சோனியா, ராகுல் மீது “ட்ரோல்”! ரஃபேல் டூ பிபிசி - மோடியின் அனிமேஷன் வீடியோ
குஜராத் கலவரத்தில் மோடியின் தலையீடு இருப்பதாக கூறும் பிபிசி ஆவணப்படத்தையும் அவர் கண்டுகொள்ளாமல் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி நடப்பதாக அந்த வீடியோவில் உள்ளது.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் பயணம், அவருக்கு இருந்த தடைகள், அவர் பிரதமராகி மேற்கொண்ட திட்டங்கள் என பல்வேறு விசயங்கள் குறித்து விவரிக்கும் அனிமேஷன் வீடியோ ஒன்றை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டு இருக்கிறது. இதனை பாஜகவினர் அதிகளவில் பகிர்ந்து வருகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிகாலம் 2024 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்து மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இதற்கான பணிகளை இப்போதே அரசியல் கட்சிகள் தொடங்கி இருக்கின்றன.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் பெரும் கூட்டணியை அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வரும் நிலையில், மறுபக்கம் மோடியின் சாதனைகளை விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளது பாஜக.

மோடியின் அரசியல் பயணம்
அந்த வகையில்தான் பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் பயணம் மற்றும் பிரதமராகி அவர் செய்த பணிகள், அவருக்கு இருந்த தடைகளை விவரிக்கும் அனிமேஷன் வீடியோவை பாஜக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. நான் போக வேண்டும் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அந்த வீடியோ 2014 ல் பிரதமர் இருக்கையை நோக்கி மோடி படிக்கட்டில் ஏறுவதை போல் அமைக்கப்பட்டு உள்ளது.

சிரிக்கும் சோனியா
தோளில் ஜோல்னா பை ஒன்றை மாட்டிக்கொண்டு பிரதமர் இருக்கை நோக்கி படிக்கட்டில் ஏறும் மோடியின் அப்போது குறுக்கே நிற்கும் சோனியா காந்தி சாய்வாலா என்று கூறி ஏளனமாக சிரிக்கிறார். அதை கண்டுகொள்ளாமல் செல்லும் அவரிடம் அடுத்ததாக அமெரிக்காவில் மோடி நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஆணையை சோனியா காந்தி காட்டுவதை போல் அனிமேஷனை வடிவமைத்துள்ளனர்.

பிஎம் சீட்டில் சாய்வாலா
அதையும் தாண்டி பிரதமர் இருக்கை அருகே செல்லும் நரேந்திர மோடி சாய்வாலா என்று எழுதப்பட்ட கேனை இருக்கையில் வைத்துவிட்டு நிற்கிறார். அப்போது ஒபாமா ஓடி வந்து மோடி அமெரிக்கா செல்வதற்கான அழைப்பிதலை வழங்குகிறார். அதன் தொடர்ச்சியாக தூய்மை இந்தியா திட்டம், சிறிய தொழில் நிறுவனங்களுக்கான முத்ரா திட்டத்தை அவர் தொடங்கி வைப்பதாக காட்சியமைத்துள்ளனர்.

மக்கள் நல திட்டங்கள்
அடுத்து அடுப்பூதி சமைக்கும் முதாட்டிக்கு உஜ்வாவாலா யோஜனா திட்டம் மூலம் மோடி கேஸ் சிலிண்டர் வழங்குகிறார். அடுத்து குடிசையில் வாழும் ஏழைகளுக்கு 5 கிலோ கோதுமை ஒரு கிலோ தானியங்கள் வழங்குகிறார். அவர்கள் ஜன் தன் வங்கிக்கணக்கு அட்டையை வழங்குகிறார். மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்தவர்களுக்கு ரூ. 2,914 கோடி நிதி ஒதுக்கியதாக காட்டப்படுகிறது.

ராகுல் காந்தியின் ரபேல் குற்றச்சாட்டு
ஜீவன் ஜோதி பீமா யோஜனா, கட்டிடத் தொழிலாளர்கள் நல நிதி, பிரதமர் வீட்டு வசதி திட்டம், குடிநீர் திட்டம், விவசாயிகளுக்கான மானியம் போன்ற திட்டங்களை அவர் வழங்குவதாக வீடியோவில் வடிமைத்துள்ளார்கள். இதற்கிடையே ராகுல் காந்தி அவர் மீது ரபேல் ஊழல் குற்றச்சாட்டை சுமத்துவதாகவும் அதை மோடி ஒன்றுமில்லாமல் செய்ததாகவும் காட்டப்படுகிறது.

2019 தேர்தல்
2019 தேர்தலில் மோடிக்கு தடையாக ராகுல் காந்தி நிற்பதை போலவும், அவரை சௌக்கிதார் என்று விமர்சிப்பதையும் காட்டி இருக்கிறார்கள். 2019 ல் வென்ற பிறகு அவரை சந்திக்க அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், இன்னாள் அதிபர் ஜோ பைடன் வந்ததாக காட்டும் அந்த வீடியோவில் அதன் பிறகு கொரோனா வைரஸ் பரவலை மோடி கையாண்ட விதம், அதன் தொடர்ச்சியாக இலவச தடுப்பூசி வழங்கியதாக காட்சிபடுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கு
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் 2 பில்லியன் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக வரும் அந்த வீடியோவில் எச்.ஏ.எல். ஹெலிகாப்டர் தொழிற்சாலை தொடங்கப்பட்டதையும், அப்போது ரபேல் குற்றச்சாட்டை வைத்த ராகுல் காந்தியை நகைப்போடு மோடி பார்ப்பதாக காட்சிபடுத்தப்பட்டு உள்ளது. அடுத்ததாக குஜராத் கலவரத்தில் மோடியின் தலையீடு இருப்பதாக கூறும் பிபிசி ஆவணப்படத்தையும் அவர் கண்டுகொள்ளாமல் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி நடப்பதாக அந்த வீடியோ முடிவடைகிறது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications