பாஜக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல்.. பூரியில் நரேந்திர மோடி போட்டியில்லை

உறியடி 2 திரைப்படம் அனைவரையும் சிந்திக்க வைக்கும் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    BJP candidate List: பாஜக 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- வீடியோ

    டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று நள்ளிரவு வெளியிட்டது. ஒடிசா மாநிலம் பூரியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு வேறு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

    லோக்சபா தேர்தலையொட்டி, பாஜக சார்பில் வெளியிடப்பட்ட முதலாவது வேட்பாளர் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    BJP releases 3rd list with 36 candidates

    அதேநேரம், இரண்டாவது தொகுதியாக, ஒடிசா மாநிலத்தின் பூரி தொகுதியில் மோடி போட்டியிடுவார் என்று தகவல்கள் வலம் வந்தன.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில், பாஜகவின் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பூரி தொகுதியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது தொகுதியாக பூரியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்புகள் முடிவுக்கு வந்துள்ளன. நேற்று மொத்தம் 36 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

    மகாராஷ்டிராவிற்கு 6, ஒடிசாவுக்கு 5, அசாம், மேகாலயா மாநிலங்களில் தலா ஒரு வேட்பாளர் அறிவிக்கப்பட்டனர். ஏப்ரல் 11ஆம் தேதி லோக்சபா தேர்தலுடன் நடைபெறும் சட்டசபை நடைபெறும் தேர்தலுக்காக 22 வேட்பாளர்களையும் பாஜக அறிவித்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+