அடேங்கப்பா! ஜெட் ஸ்பீடு! தேர்தலே அறிவிக்கல.. அதுக்குள்ள வேட்பாளர்கள் பட்டியல்.. 'ஷாக்' கொடுத்த பாஜக!
டெல்லி: 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையமே இன்னும் அறிவிக்காத நிலையில், முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து எதிர்க்கட்சிகளுக்கு 'பிபி' ஏற்றியுள்ளது பாஜக தலைமை. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக ராஜஸ்தான், மிஸோரம், சத்தீஸ்கர், தெலங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், இந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களை அரசியல் கட்சிகள் தீவிரமாக அனுகுகின்றன. இந்த 5 மாநிலங்களில் உள்ள கட்சிகள் மட்டுமல்லாது, நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளும், அரசியல் ஆய்வாளர்களும் இந்த தேர்தலை உற்றுநோக்கி வருகின்றனர்.
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில், மத்திய பிரதேசத்தில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே, 2024 லோக்சபா தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு உத்வேகம் அளிக்கும் வகையில், இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக பணியாற்றி வருகிறது.
BJP releases the first list of 21 candidates for the upcoming Chhattisgarh Assembly Elections. pic.twitter.com/7vhoSgfbCY
— ANI (@ANI) August 17, 2023
இன்னும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்பாகவே தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் 39 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
BJP releases the first list of 39 candidates for the upcoming Madhya Pradesh Assembly Elections. pic.twitter.com/7xdtQFxz9M
— ANI (@ANI) August 17, 2023
அதேபோல சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 21 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவிப்பதற்கு முன்பே வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிடுவது இதுவே முதல் முறை.
भारतीय जनता पार्टी केन्द्रीय चुनाव समिति की बैठक भाजपा राष्ट्रीय अध्यक्ष श्री @JPNadda की अध्यक्षता में कल दिनांक 16.08.2023 को संपन्न हुई।
— BJP (@BJP4India) August 17, 2023
केन्द्रीय चुनाव समिति ने छत्तीसगढ़ एवं मध्य प्रदेश में होने वाले आगामी विधानसभा चुनाव 2023 के लिए निम्नलिखित नामों पर अपनी स्वीकृति प्रदान… pic.twitter.com/SxDPiWW44d
மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல் குறித்து பாஜகவின் மத்திய தேர்தல் குழு நேற்று கூடி ஆலோசித்தது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தான் இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications