ராஜ்யசபா தேர்தல்.. பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு! நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து போட்டி
டெல்லி: விரைவில் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவி விரைவில் காலியாகிறது. இதற்கான தேர்தல் வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை அனைத்து கட்சிகளும் வரிசையாக அறிவித்து வருகிறது.

பாஜக வேட்பாளர் பட்டியல்
தற்போது பல்வேறு மாநிலங்களில் உள்ள சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பாஜகவுக்கு மொத்தம் 16 இடங்கள் கிடைக்கும். இந்தச் சூழலில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. அதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மகாராஷ்டிராவில் இருந்து போட்டியிடுகிறார். அவருடன் சேர்ந்து அனில் பாண்டேவும் மகாராஷ்டிராவில் இருந்து போட்டியிட உள்ளார்,

நிர்மலா சீதாராமன்
அதேபோல மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே கர்நாடகாவில் இருந்து தான் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டு இருந்த நிலையில், இப்போது மீண்டும் அங்கு இருந்தே போட்டியிடுகிறார். மேலும், ஜக்கேஷ் என்பவரும் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்குச் செல்ல உள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 4 இடங்களுக்கு ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது.

மாநில வாரியாக
இந்த மாநிலங்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 11 இடங்கள் உள்ளன. அங்கு மொத்தம் 6 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்குத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு இருந்து இரு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிரப் பீகாரில் இருந்து இரு வேட்பாளர்கள் மற்றும் கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரகண்ட், ஹரியானா மாநிலங்களில் இருந்து தலா ஒரு வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

முக்தார் அப்பாஸ்
மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் பதவிக்காலமும் முடிவடைய உள்ளது. ஆனால் அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை. நாடு முழுவதும் புதிய மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வரும் ஜூன் 10இல் தேர்தல் நடைபெற உள்ளது.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications