லோக்சபா தேர்தல்.. வெளியானது பாஜகவின் 7வது வேட்பாளர் பட்டியல்.. நடிகை நவ்நீத் ராணாவுக்கு வாய்ப்பு
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் 7 வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகை நவ்நீத் ராணாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 19 ம் தேதி முதற்கட்ட தேர்தலும் ஜுன் 2ம் தேதி 7 ம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுவிட்டது. வரும் ஏப்ரல் 19 ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் பல மாநிலங்களில் ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெறவில்லை. அடுத்தடுத்த கட்டங்களில் தான் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் பிற மாநிலங்களுக்கான வேட்பாளர்களை அனைத்து கட்சிகளும் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக சார்பில் இன்று 7 வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 2 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தனி தொகுதியில் நடிகை நவ்நீத் ராணா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த முறை சுயேச்சையாக போட்டியிட்டு இந்த தொகுதியில் வென்ற நிலையில் பாஜகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அண்டை மாநிலமான கர்நாடகாவில் சித்ரதுர்கா தனி தொகுதியில் கோவிந்த் கார்ஜோள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் ஆவார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோற்ற நிலையில் கோவிந்த் கார்ஜோளுக்கு சித்ரதுர்கா (தனி) லோக்சபா தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications