டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மேனகா காந்தி & வருண் காந்திக்கு வாய்ப்பு.. அமித் ஷா செக்.. வெளியானது பாஜக உ.பி வேட்பாளர் லிஸ்ட்!

லோக்சபா தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட மேனகா காந்தி மற்றும் வருண் காந்திக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட மேனகா காந்தி மற்றும் வருண் காந்திக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

லோக்சபா தேர்தலில் பாஜக நாடு முழுக்க போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. பல்வேறு கட்டங்களாக இந்த பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டார்கள்.

BJP releases list of 29 candidates for Uttar Pradesh: Gives chance to Maneka and Varun Gandhi

இந்த நிலையில் உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் பக்கம் பாஜக தனது கவனத்தை திருப்பி இருக்கிறது. இரண்டு மாநிலங்களிலும் பாஜக தனியாக நிற்கிறது. இதில் உத்தர பிரதேசத்தில் பாஜக சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க திட்டமிட்டு உள்ளது.

ஆனால் இதுவரை எந்த பேச்சுவார்த்தையிலும் உடன்படிக்கை ஏற்படவில்லை. தற்போது இரண்டு மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டு இருக்கிறது.

"ஒரு பைசா லஞ்சம் வாங்கட்டும்.. விஷ ஊசி போட்டு கொன்று விடுவோம்".. சீமான் அதிரடி அட்டாக்!

உத்தர பிரதேசத்தில் போட்டியிடும் 29 வேட்பாளர்கள் மேற்கு வங்கத்தில் போட்டியிடும் 10 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி இதில் மேனகா காந்தி மற்றும் வருண் காந்திக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு வழங்கி உள்ளது. உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூரில் மேனகா காந்தி போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பலிபிட்டில் வருண் காந்தி பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார்.

சுல்தான்பூரில் மேனகா காந்தி போட்டியிடுவது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

English summary
BJP releases list of 29 candidates for Uttar Pradesh & 10 candidates for West Bengal for Lok Sabha Elections 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X