கங்கையில் நீராடினால் வறுமை ஒழியுமா.. அமித்ஷாவை சாடிய மல்லிகார்ஜுன கார்கே.. பாஜக பதிலடி
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாகராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்படபாஜக தலைவர்கள் பலர் புனித நீராடி வருகிறார்கள்.இன்னும் பலர் புனித நீராட செல்ல உள்ளார்கள்.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதனை கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக தலைவர்கள் கேமராவுக்கு முன்பாக நீராடுவதாக விமர்சித்தார். கங்கையில் நீராடுவது நாட்டில் வறுமையை ஒழிக்குமா அல்லது பசித்தவர்களின் வயிற்றை நிரப்புமா என்று மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா கோலாகலமாக நடந்து வருகிறது. பிரயாக்ராஜ் நகரத்தில் பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கும்பமேளா நடத்தப்படுவது வழக்கம். அதேநேரம் 12ம் எண்ணின் மடங்காக வரும், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகா கும்பமேளா வெகு சிறப்பு பெற்றதாக கருதப்படும். அந்த வகையில் கும்பமேளா நடந்து வருகிறது.

அங்கு தினம், தினம் புனித நீராடுவதற்காக புதுப்புது மனிதர்கள், பக்தர்கள், சாதுக்கள் வந்து கொண்ட இருக்கிறார்கள். கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணியில் எங்கு பார்த்தாலும் சாதுக்கள், துறவிகள், அகோரிகள், பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். இந்த மகா கும்பமேளாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்படபாஜக தலைவர்கள் பலர் புனித நீராடி வருகிறார்கள்.இன்னும் பலர் புனித நீராட செல்ல உள்ளார்கள்.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் மோவில் 'ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான்' என்ற பேரணி நடந்தது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கங்கையில் நீராடுவது நாட்டில் வறுமையை ஒழிக்குமா அல்லது பசித்தவர்களின் வயிற்றை நிரப்புமா என்று கேள்வி எழுப்பினார்.
இதுபற்றி அவர் கூறும் போது, "நான் யாருடைய நம்பிக்கையையும் கேள்வி கேட்க விரும்பவில்லை. யாராவது மோசமாக உணர்ந்தால், நான் இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால், ஒரு குழந்தை பசியால் இறக்கும் போது, பள்ளிக்குச் செல்லமுடியாத நேரத்தில். தொழிலாளர்கள் தங்கள் சம்பள நிலுவைத் தொகையைப் பெறமுடியாத நேரததில், இந்த மக்கள் (பாஜகவினர்) ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழித்து கங்கையில் நீராட செல்கிறார்கள். புகைப்படமாக அது நன்றாகத் தெரியும் வரை நீராடுகிறார்கள்.
அப்படிப்பட்டவர்களால் நாட்டிற்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. எங்கள் நம்பிக்கை கடவுள் மீதுதான் -- மக்கள் தினமும் வீட்டில் 'பூஜை' செய்கிறார்கள், அனைத்து பெண்களும் ஒவ்வொரு நாளும் வீட்டில் 'பூஜை' செய்த பிறகு தங்கள் வீடுகளை விட்டு வெளியே சென்று வருகிறார்கள். இதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஏழைகளை மதத்தின் பெயரால் சுரண்டப்படுவது எங்களுக்கு ஒரு பிரச்சனை," என்று கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் இந்த கருத்துக்களை மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடிய நிலையில், அதனை விமர்சிக்கும் விதமாக மல்லிகார்ஜுன கார்கே இந்த கருத்தை கூறியிருந்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸின் இந்த வெறுப்பு கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையின் மீதான தாக்குதல் என்று பாஜக எம்.பி.யும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா கூறினார்.
பாஜக எம்பி சம்பித் பத்ரா இதுபற்றி கூறுகையில், மகா கும்பமேளா பல ஆண்டுகளாக சனாதன நம்பிக்கையின் அடையாளமாக இருந்து வருகிறது என்று கூறிய உலகம் முழுவதும் இந்த நம்பிக்கையை மதிக்கும் அதே வேளையில், இந்தியாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் மகா கும்பமேளாவையும், மக்களின் இந்த நம்பிக்கையையும் கேலி செய்கிறது என்பதை நினைத்து நான் வேதனைப்படுகிறேன்
மகாகும்பமேளா மற்றும் கங்கை நதி பற்றிய காங்கிரஸ் தலைவரின் கருத்துக்கள் கோடிக்கணக்கான மக்களை காயப்படுத்தியுள்ளது. கங்கையில் நீராடுவது வறுமையை ஒழிக்குமா, வேலைவாய்ப்புகளை வழங்குமா அல்லது மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருமா என்று கார்கே கேள்வி எழுப்புகிறார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வேறு எந்த மதத்தின் நம்பிக்கையைப் பற்றியும் இதுபோன்ற கருத்துக்களை வெளியிட முடியுமா...இந்த விஷயத்தில் நான் அவர்களுக்கே சவாலே விடுகிறேன்..
மக்களுக்கு வேலை கிடைக்குமா அல்லது இப்தார் விருந்துக்குச் செல்வதன் மூலம் வறுமை நீங்குமா என்று அவர்களால் (காங்கிரஸ்) கேள்வி கேட்க முடியுமா? வேறு எந்த மதத்தின் நம்பிக்கையுடனும் விளையாடுவதை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இதுபோன்ற கருத்துக்கள் வெட்கக்கேடானது. காங்கிரசுக்கு ஏன் இவ்வளவு சனாதன எதிர்ப்பு மனநிலை இருக்கிறது?" இவ்வாறு பாஜக எம்பி சம்பித் பத்ரா காட்டமாக விமர்சித்தார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications