பாஜக எத்தனை மாநிலங்களில் ஆட்சியிலிருக்கு தெரியுமா? இந்த மேப் பாருங்க
டெல்லி: நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக மற்றும் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் என ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்தது. அதற்கான முடிவுகள் நேற்று வெளியாகின.
இதில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும், மற்ற நான்கு மாநிலத்தில் பாஜகவும் ஆட்சியைப் பிடித்தன. உத்தரப்பிரதேசத்தில் பாஜக இரண்டாவது முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்கள்
இதையடுத்து பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை பாஜக அருணாச்சலப் பிரதேசம், கோவா, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மணிப்பூரில் பாஜக பெரும்பான்மையோடு வெற்றி பெற்றதால், பாஜக நேரடியாக ஆளும் மாநிலத்தின் கீழ் வருகிறது.

மணிப்பூரில்
அதேபோல் அசாம், பிகார், ஹரியானா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மணிப்பூரில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்தது. இனி பாஜக ஆட்சி நடக்கும். பாஜகவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆட்சி நடக்கிறது.

காங்கிரஸ்
இந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி. அதையடுத்து, காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை இரண்டாக குறைந்துள்ளது. தற்போது சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் தான் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தமிழகம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணிகள் ஆட்சியில் உள்ளன.

ஆம் ஆத்மி
மற்ற மாநிலங்களில் மாநில கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. ஆம் ஆத்மி டெல்லியில் இருந்து, தன்னுடைய வெற்றியை பஞ்சாபிலும் தொடர்கிறது. இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு சமமாக இரண்டு மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ளது ஆம் ஆத்மி கட்சி. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் கட்சிகளும் போட்டியிட்டன. கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நல்ல வாக்குவங்கியைப் பெற்றுள்ளது.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள்! போட்ட கண்டிஷன் என்னாச்சு? காங்கிரஸுக்கு ஸ்ரீநிதி கேள்வி -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி!












Click it and Unblock the Notifications