பாஜக ஆளும் மாநிலங்கள் இப்போது எத்தனை தெரியுமா? ஜஸ்ட் இந்த மேப்பை பாருங்க!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது. இதில் ஹரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி அரியணை ஏறியுள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவில் பாஜக எந்தெந்த மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாகவும், ஹரியானாவில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று காலை 8 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து சட்டசபை தேர்தல் நடந்தது.. கடந்த 2014ல் பாஜக மற்றும் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்தது. மெகபூபா முப்தி முதல்வராக இருந்தார். கடந்த 2018 ல் பாஜக ஆதரவை பெற்றதால் மெகபூபா முப்தியின் ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு ஜனாதிபதி ஆட்சி அமலான நிலையில் தேர்தல் முடிவடைந்து ஓட்டு எண்ணிக்கை இன்று நடந்தது.
அதேபோல் மறுபுறம் ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடக்கிறது. பாஜகவில் நயாப் சிங் சைனி முதல்வராக உள்ளார். ஹாட்ரிக் முறையில் வெற்றி பெற்று பாஜக அசத்தி உள்ளது. கடந்த 2014, 2019ம் ஆண்டை போல் மத்தியில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவுக்கு இந்த சட்டசபை தேர்தல்கள் மிகவும் முக்கியத்துவமாக பார்க்கப்பட்டது. இதில் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றிய நிலையில் ஹரியானாவில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. இத்தகைய சூழலில் தான் ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுக்கு நடுவே இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களின் மேப் வெளியாகி உள்ளது.
அதாவது இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. மொத்தமாக பார்த்தால் 36 முதல்வர்கள் நம் நாட்டில் இருப்பார்கள். அந்த வகையில் பாஜக மட்டும் 15 மாநிலங்களை ஆட்சி செய்கிறது. உத்தர பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், சிக்கிம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், அசாம், நாகலாந்து, மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தனித்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இங்கு பாஜகவை சேர்ந்தவர்கள் முதல்வர்களாக உள்ளனர்.ஹரியானாவிலும் மீண்டும் பாஜக அரியணை ஏறி உள்ளது. இங்கு பாஜகவை சேர்ந்தவர் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதேபோல் கூட்டணி கட்சியாக பீகார், மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலங்களில் அதிகாரத்தை பாஜக பங்கிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications