"7 சகோதரிகளை” கைப்பற்றும் பாஜக.. வடகிழக்கில் துடைத்து எறியப்படும் காங்கிரஸ்.. C Voter சர்வே ரிசல்ட்!
டெல்லி: ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பின்படி, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 21 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஏபிபி நியூஸ் - சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் நடத்தப்பட்ட சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏழு சகோதரிகள்: இந்தியாவின் வடகிழக்கில் இருக்கும் ஏழு மாநிலங்கள் "ஏழு சகோதரிகள்" என அழைக்கப்படுகின்றன. அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய 7 மாநிலங்களே செவன் சிஸ்டர்ஸ் என்று வர்ணிக்கப்படுகின்றன. இந்த வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன.
அசாம், மணிப்பூர், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆள்கிறது. அதே வேளையில், மேகாலயா மற்றும் நாகாலாந்தில் ஆளும் கூட்டணியில் பாஜகவும் பார்ட்னராக உள்ளது. வட கிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை தற்போது பாஜக எதிர்க்கட்சியாக இருக்கும் ஒரே மாநிலம் மிசோரம் மட்டுமே.
வடகிழக்கில் யார் ராஜா?: மணிப்பூர் கலவரம், அதனால் ஏற்பட்ட உயிர் பலிகள் உள்ளிட்ட விவகாரங்கள் நாடு முழுவதும் கவனிக்கப்பட்டன. இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் வடகிழக்கு மாநிலங்களைத் தக்கவைத்துக்கொள்ளப் போவது யார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
அசாமில் பாஜக கிங்: ABP-CVoter இன் கருத்துக்கணிப்பு கருத்துக்கணிப்பின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அசாம் மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்றும், அசாமில் மொத்தமுள்ள 14 லோக்சபா தொகுதிகளில் 12-ல் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளது, மேலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு வெறும் 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சி வோட்டர் கருத்துக் கணிப்பின்படி அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி 45 சதவீத வாக்குகளையும், இந்தியா கூட்டணி 38 சதவீத வாக்குகளையும், 13% AIUDF கட்சிக்கும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அசாம் தவிர வடகிழக்கில் உள்ள மாநிலங்களில் இருக்கும் 11 மக்களவைத் தொகுதிகளில் 9 பாஜக கூட்டணி கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் தவிர்த்து வட கிழக்கு மாநிலங்களில்: காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, அசாம் தவிர்த்து வடகிழக்கு பகுதியில் மொத்தம் உள்ள 11 லோக்சபா சீட்களில் ஒரு மக்களவைத் தொகுதியில் மட்டுமே வெற்றிபெற வாய்ப்புள்ளது என்றும், மற்ற கட்சிகள் 1 இடத்தில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் ஏபிபி சி வோட்டர் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அருணாச்சல பிரதேசத்தில் பாஜக 61 சதவீத வாக்குகளைப் பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 32 சதவீத வாக்குகளும், மற்றவை 7 சதவீத வாக்குகளும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மேகாலாயாவிலும் பாஜக 2 இடங்களிலும் வெல்லும் என்கிறது ஏபிபி சி வோட்டர் கணிப்பு.
மணிப்பூர் நிலவரம்: மணிப்பூரில், பாஜக தலைமையிலான என்.டி.ஏ பெரும்பான்மை வாக்குகளைக் கைப்பற்றுவதாகத் தெரிகிறது சி வோட்டர் கணிப்பு. அங்கு பாஜக கூட்டணி 50 சதவீத வாக்குகளுடன் 2 சீட்களையும் இந்தியா கூட்டணி 34 சதவீத வாக்குகள், மற்றவர்கள் 16 சதவீத வாக்குகளும் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications