கூட்டணியை நம்பி ஆட்சி.. ரெடியாகும் பாஜக.. என்டிஏ-வில் எத்தனை கட்சிகள் இருக்கு? இதோ லிஸ்ட்
டெல்லி: தற்போதைய நிலவரப்படி என்டிஏ கூட்டணி கட்சிகளை நம்பியே ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. பாஜகவிற்கு இன்னும் 30 இடங்கள் ஆட்சி அமைக்க தேவை என்கிற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் எவை எவை என்றும் அவை எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன என்பது பற்றியும் இங்கு பார்க்கலாம்.
2024 லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகள் உள்ள நிலையில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 272 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 295 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
பாஜக தனியாக 240 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இப்போது உள்ள சூழலில் பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பே இல்லை என்றே தெரிகிறது. இதனால், கூட்டணி கட்சிகளை நம்பியே ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி பாஜகவிற்கு இன்னும் 30 இடங்கள் ஆட்சி அமைக்க தேவை. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளை சேர்த்தால் 295 இடங்கள் பாஜகவிற்கு முன்னிலை வருகிறது. இதனால், கூட்டணி கட்சிகள் கை கொடுத்தால் பாஜக எந்த சிக்கலும் இன்றி ஆட்சி அமைத்துவிடும். அதேவேளையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் பின் வாங்கினால் பாஜக ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்படலாம்..

பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளன என்பது பற்றியும் எத்தனை இடங்களில் முன்னிலையில் உள்ளது என்பது பற்றியும் இங்கே பார்க்கலாம்..
பாஜக - 244
தெலுங்கு தேசம் கட்சி - 16
ஐக்கிய ஜனதா தளம் - 12
சிவசேனா - 6
பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு - 0
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) பீகார் - 5
தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரா - 1
பாரத தர்ம ஜன சேனா கேரளா - 1
மதசார்பற்ற ஜனதா தளம் - 02
அசோம் கண பரிஷத் அசாம் - 2
ஜன சேனா கட்சி ஆந்திரா - 2
தேசிய மக்கள் கட்சி மேகாலயா - 2
ராஷ்டிரிய லோக் தளம் உத்தரப் பிரதேசம் - 2
அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஜார்கண்ட் - 1
ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா பீகார் - 1
நாகா மக்கள் முன்னணி மணிப்பூர் - 1
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி நாகாலாந்து - 1
ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா பீகார் - 1
ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா மகாராஷ்டிரா - 1
சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி உத்தரப்பிரதேசம் - 1
ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் அசாம் - 1












Click it and Unblock the Notifications