ரியல் பாஸ் மோடிதான்! ராகுல் காந்தியால் ஜீரணிக்க முடியவில்லை.. அதான் இப்படி பண்றாரு! பாஜக 'சுளீர்'
டெல்லி: ராகுல் காந்தி 10 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இன்று சான்பிரான்சிஸ்கோவில் உரையாற்றினார். இதில் அவர் பேசியிருந்தது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விமர்சித்துள்ளார்.
10 நாட்கள் அமெரிக்கா பயணத்தில் வால் ஸ்ட்ரீட் நிர்வாகிகள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்காவின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனும் ராகுல் காந்தி கலந்துரையாடுகிறார். ஜூன் 4ம் தேதி பொதுக் கூட்டம் மாதிரியான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியையும் நடத்துகிறார்.

இந்நிலையில் இதற்கு முன்னதாக இன்று கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா கிளாராவில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மொஹபத் கி டுகான்' எனும் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியது பாஜகவினரிடையே விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது, "இந்தியாவில் சிலர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எந்தவொரு மனிதனும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு உலகம் மிகப் பெரியது மற்றும் சிக்கலானது. இப்படி இருக்கையில் எல்லாம் தெரியும் என்று கூறுவது ஒரு வகையான நோய்.
இவர்கள் கடவுளைவிட தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நம்புகின்றனர். இவர்கள் விஞ்ஞானிகளுக்கு அறிவியலையும், வரலாற்று ஆசிரியர்களுக்கு வரலாற்றையும், ராணுவத்திற்கு போர் தந்திரத்தையும் கற்றுத் தந்துவிட முடியும் என நினைக்கிறார்கள். இதற்கு ஓர் உதாரணம்தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. நீங்கள் கடவுளை மோடியுடன் உட்கார வைத்தால், இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது? என்பதை அவருக்கே விளக்குவார். இது 'என்ன இது நான்தானே பிரபஞ்சத்தை உருவாக்கினேன்' என்று கடவுளுக்கு குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.
இவ்வாறு விஞ்ஞானிகளுக்கு அறிவியலையும், வரலாற்று ஆசிரியர்களுக்கு வரலாற்றையும், ராணுவத்திற்கு போர் தந்திரத்தையும் கற்றுத் தந்துவிட முடியும் என கருதுபவர்கள் நினைப்பதைபோல இந்த விஷயங்களின் மையக்கரு அவ்வளவு எளிதானது கிடையாது. எனவே இதனை அவர்கள் முழுமையாக கேட்கவும் தயாராக இல்லை. இதன் மூலம் இந்தியா என்கிற எண்ணம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது" என்று பேசியிருந்தார். மேலும், இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த மக்கள் எழுப்பிய 6 கேள்விகளுக்கும் விடையளித்திருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த உரை குறித்து பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த உரையை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசுகையில், "ராகுல் காந்தி தனது வெளிநாட்டு பயணங்களின்போது இந்தியாவை அவமதிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு பயணத்தின்போது கிட்டத்தட்ட 24 பிரதமர்கள் மற்றும் முக்கிய உலக தலைவர்களை சந்தித்திருந்தார். ஆஸ்திரேலிய பிரதமர், நரேந்திர மோடியை 'ரியல் பாஸ்' என்று அழைத்திருந்தார். இதனை ராகுல் காந்தியால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை" என்று விமர்சித்திருக்கிறார்.
ஏற்கனவே கடந்த முறை ராகுல் காந்தி பிரிட்டன் சென்றிருந்தபோது அங்கு அவர் பேசியிருந்ததை பாஜக பெரும் சர்ச்சையாக மாற்றியது. நாடாளுமன்றத்திலும் இது குறித்து ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications