13ல் 11 அவுட்! இடைத்தேர்தல் ஷாக்.. மத்தியில் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் அதிர்ச்சி தோல்வி கண்ட பாஜக

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், இந்தியா கூட்டணி 10 தொகுதிகளில் வென்றுள்ளது. பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

1 மாதத்திற்கு முன்புதான் மத்தியில் 3வது முறையாக பாஜக ஆட்சி அமைந்தது. அடுத்த 1 மாதத்திற்குள் 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தோல்வியைச் சந்தித்துள்ளது.

By Election 2024 By Election Results 2024 Bihar 2024 2024 bjp

இமாச்சல பிரதேசம்: இமாச்சலப் பிரதேசத்தில், தேரா, ஹமிர்பூர், நலகார்க், ஆகிய மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தேரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இமாச்சல பிரதேச மாநில முதல்வர் சுகுவிந்தர் சுகுவின் மனைவி கம்லேஷ் தாக்கூர் களமிறங்கினார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹோசியார் சிங்கைவிட,9,399 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

நலகர்க் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்ட ஹர்தீப் சிங் பவா 34 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று சுமார் 8,890 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஹமிர்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான பாஜக சார்பில் களம் இறக்கப்பட்ட ஆஷிஷ் சர்மா 1,571 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மத்திய பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தின் அமர்வாரா சட்டமன்றத் தொகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் கமலேஷ் பிரதாப் சாகா. ஆளும் கட்சியாக பாஜக இருந்த போதும் வெறும் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அவர் வெற்றி பெற்றுள்ளார்.

பஞ்சாப்: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில், பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தனித்தனியாக தேர்தலைச் சந்தித்தனர். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மொகிந்தர் பகத், சுமார் 55 ஆயிரம் வாக்குகளை பெற்று 37 ஆயிரத்து 325 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்நாடு: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் அன்புமணியை விட, 67,757 வாக்குகள் அதிகம் பெற்று பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளார். இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்குதான்.

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் மற்றும் மங்களூர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் கட்சியான பாஜகவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இரண்டு தொகுதிகளிலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதில் பத்ரிநாத் தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி சார்பாக லகாபத் சிங் புடோலா களமிறக்கப்பட்டிருந்த நிலையில் அவர் 28,161 வாக்குகளை பெற்று சுமார் 5,224 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரான ராஜேந்திர சிங் பந்தாரியை தோற்கடித்துள்ளார்.

மங்களூர் தொகுதியில் பாஜக சார்பில் கர்த்தார் சிங் பந்தானா போட்டியிட்ட நிலையில், அவரை காங்கிரஸ் கட்சி சார்பில் களம் கண்ட கோசி முகமது நிஜாமுதீன் 422 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக க்ளீன் ஸ்வீப் செய்த நிலையில் இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்த தோல்வி அரசியல் தளத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்கம்: மேற்குவங்க மாநிலத்தில் ராய்கஞ்ச், ரானாகாட் தக்ஷின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

ராய்கஞ்ச், ரானாகாட் தக்ஷின் மற்றும் பாக்தா ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்த நிலையில் மூவரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு தாவியதை அடுத்து அவர்களின் பதவி காலியாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மணிக்தலா தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சதன் பாண்டே மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

ராய்கஞ்ச் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கிருஷ்ணா கல்யாணி சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் மணிக்தலா தொகுதியில் சுப்தி பாண்டே 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், ராணா காட் தக்ஷின் தொகுதியில் முக்த் மணி அதிகார் சுமார் 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் பாக்தா தொகுதியில் மதுப்பர்ணா தாகூர் சுமார் 33,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

பீகார்: பீகார் மாநிலத்தில், ரூபாலா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளும் தோல்வியுற்று சுயேட்சையாக போட்டியிட்ட சங்கர் சிங் சுமார் 8,246 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மூன்று தொகுதிகளில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், பஞ்சாப் மாநிலத்தில் மேற்கு ஜலந்தர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியும், தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும் உத்தராகண்டின் 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் மேற்கு வங்கத்தின் நான்கு தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. 13 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 10 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும், சுயேச்சை ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+