வாணியம்பாடி கொட்டகையில் 16 வயது பெண் பரிதாபம்.. ராத்திரியோடு ராத்திரியாக பெற்றோர் செய்த காரியம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்துள்ள இந்த சம்பவம் மொத்த பேரையும் திகைக்க வைத்துள்ளது.. 16 வயது மோவிதா என்ற பெண் திடீரென இறந்துவிட்டார்.. திடீரன அவரது உடலை எரித்துள்ளனர்.. இதெல்லாம்தான் அக்கிராம மக்களுக்கு மிகப்பெரிய சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளது.. இந்த சந்தேகம் போலீசுக்கும் போனதால், மோவிதா மரணம் குறித்த விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.. என்னதான் நடந்தது திருப்பத்தூர் மாவட்டத்தில்?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஊராட்சி ஏரி கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய 16 வயது மகள் மோவிதா, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

Vaniyambadi girl death 16-year-old girl Vaniyambadi tragedy 16

வாணியம்பாடி 16 வயது பெண்

நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவி, சாயங்கலாலம் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மோவிதாவை பல இடங்களில் தேடினார்கள்..

அப்போது, வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்து கொட்டகையில் மோவிதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். மகளின் உடலைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். ஆனால் இந்த மரணத்தில் தான் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் திருப்பங்கள் நடக்க ஆரம்பித்தன.

ராத்திரியோடு ராத்திரியாக

பொதுவாக இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிப்பதுதான் வழக்கம். ஆனால், மோவிதாவின் பெற்றோரும், சொந்தக்காரர்களும் அம்பலூர் போலீசாருக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக, ராத்திரியோடு ராத்திரியாக மாணவியின் சடலத்தை மீட்டு, தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.. அங்கு யாருக்கும் தெரியாமல் அவசர அவசரமாக உடலைத் தீயிட்டு எரித்து தகனம் செய்துள்ளனர்.

ஆனால் பொழுது விடிந்ததுமே இந்த விவகாரம் அந்த பகுதி முழுவதும் பரவியது. நள்ளிரவில் மாணவியின் உடல் எரிக்கப்பட்ட சம்பவம் தும்பேரி கிராம நிர்வாக அலுவலர் காசிநாதனுக்கு தெரியவந்தது. உடனடியாக அவர் அம்பலூர் ஸ்டேனுக்கு இந்த திடீர் மரணம், திடீர் உடல் எரிப்பு குறித்துப் புகார் அளித்தார்.

விரைந்த விஏஓ

புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாம்பலாகிக் கிடந்த இடத்தை ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், மாணவியின் அப்பா கோவிந்தசாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெற்ற மகளின் உடலை போலீசுக்குத் தெரியாமல் அவசர அவசரமாக நள்ளிரவில் எரிக்க வேண்டிய அவசியம் என்ன? மாணவி உண்மையிலேயே தற்கொலைதான் செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

மர்ம மரணத்துக்கு என்ன காரணம்?

அதேபோல மாணவி மோவிதா படித்து வந்த அரசுப் பள்ளிக்கு சென்று அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளிடம் போலீசாரின் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். மாணவிக்கு ஏதேனும் குடும்பப் பிரச்சனை இருந்ததா அல்லது பள்ளியில் ஏதேனும் மன உளைச்சல் ஏற்பட்டதா என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டனர்.. அதேபோல உறவினர்கள் பக்கமும் விசாரணை வளையம் நீண்டுள்ளது.

போலீசுக்கு தெரியாமல் உடலை நள்ளிரவில் எரித்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பையும், பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது. போஸ்ட் மார்ட்டம் கூட செய்யாமல் ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் உடல் எரிக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த மர்ம மரணத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டுவர அம்பலூர் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+