கத்தார் ஏர்வேஸை புறக்கணிக்க ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்யும் பாஜகவினர் - அந்த ஸ்பெல்லிங்தான் தப்பு
டெல்லி: நபிகள் நாயகத்துக்கு எதிரான பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் வெறுப்பு பிரச்சாரத்துக்கு கத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கத்தார் ஏர்வேஸை புறக்கணிப்போம் என பாஜக ஆதரவாளர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

கலவரம்
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து வட மாநிலங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மகாராஷ்டிராவில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வளைகுடாவில் எதிர்ப்பு
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
குவைத், கத்தார், ஓமன் ஆகிய நாட்டு அரசுகள் இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர்.

கட்சியிலிருந்து நீக்கம்
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், மத அடிப்படையில் இழிவுபடுத்துவது பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், தங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது எனவும் கூறினார். இதனை தொடர்ந்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்த நுபுர் ஷர்மா மற்றும் அக்கட்சியை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டு உள்ளனர்.

கத்தாரில் கடும் எதிர்ப்பு
குறிப்பாக அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கத்தார் சென்றுள்ள நிலையில், அந்நாட்டுக்கான இந்திய தூதரிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டுள்ளது கத்தார் அரசு. இதன் காரணமாகவே, வெங்கய்யா நாயுடுவுடனான விருந்தில் கத்தார் துணை அதிபர் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
Recommended Video

கத்தார் ஏர்வேஸ்
மற்ற நாடுகளை போல் கத்தாரில் உள்ள கடைகளில் இந்திய பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் கத்தாருக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுக்க அந்நாட்டு விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி #BycottQatarAirways என்ற ஹேஷ்டேக்கை பாஜக ஆதரவாளர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். லட்சக்கணக்கானோரால் டிரெண்ட் செய்யப்பட்டுள்ள இந்த ஹேஷ்டேக், Boycott என்பதற்கு பதில் Bycott என எழுத்துப் பிழையுடன் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications