’ஹாட்ரிக்’ துள்ளி குதிக்கும் பாஜக! கன்னத்தில் கை வைக்கும் இந்தியா கூட்டணி.. இந்தியா டுடே சர்வே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலில் மீண்டும் பாஜக தலைமையிலானா தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. இந்தியா கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்ற கணிப்பு முடிவுகளையும் இங்கே பார்க்கலாம்.

லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. இந்த மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என அரசியல் கட்சிகள் படு பிசியாக தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.

BJP to Get Third term, How many seats will INDIA Alliance Win mood of the nation Details survey

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பாஜக, வரும் தேர்தலிலும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது. மறுபக்கம் பாஜகவை வீழ்த்திவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகள் உறுதியாக இருக்கின்றன. இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த நிதிஷ்குமார் தற்போது தேசிய ஜனநயாக கூட்டணியில் ஐக்கியம் ஆகிவிட்டார்.

அதேபோல், தனித்து போட்டியிடுவதாக மம்தா பானர்ஜியும் அறிவித்துவிட்டார். இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இது அதிர்ச்சியை கொடுத்த போதிலும், சளைக்காமல் களம் காண தயராகி வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் மல்லுக்கட்ட தயாராகி வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கும் மேல் வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்த மோடி, காங்கிரஸ் 40-50 இடங்களிலாவது வெல்லட்டும் எனக் கூறியிருந்தார்.

மறுபக்கம் பாஜக சர்வாதிகார போக்குடன் நடப்பாதகவும் வரும் தேர்தலில் பாஜக கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் பிரசாரம் மெற்கொண்டு வருகின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முன்னணி செய்தி நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியா டுடே செய்தி நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வருமாறு:-

தேசிய ஜனநாயக கூட்டணி - 335
இந்தியா கூட்டணி - 166
பிற கட்சிகள் - 42

மொத்த லோக்சபா தொகுதிகள் - 543
பெரும்பான்மைக்கு தேவையானவை - 272

கடந்த லோக்சபா தேர்தல் முடிவோடு ஒப்பிடும் போது பாஜக 18 இடங்கள் குறைவாகவும் எதிர்க்கட்சிகள் கூட்டணி 75 இடங்கள் கூடுதலாகவும் பெற வாய்ப்பு இருப்பதாக இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகளின் டேட்டாக்கள் காட்டுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+