தேர்தல் ரிசல்ட் வந்து 4 நாட்களாச்சே..3 மாநில முதல்வர்கள் யார்? முடிவெடுக்க முடியாமல் தவிக்குது பாஜக!
டெல்லி: ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்களாகிவிட்ட நிலையில் இம்மாநிலங்களில் முதல்வர்கள் யார் என முடிவெடுக்க முடியாமல் பாஜக தத்தளித்து வருகிறது.
தெலுங்கானா, சத்தீஸ்கர், ம.பி, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி இன்று முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. மிசோரம் முதல்வராக லால்துஹோமா நாளை பதவியேற்க உள்ளார்.

சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பாஜக வென்றுள்ளது. ஆனால் இந்த 3 மாநிலங்களின் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி இருப்பதால் பாஜக மேலிடம் முடிவெடுக்க முடியாமல் தத்தளித்து வருகிறது.
ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா தமக்குதான் முதல்வர் பதவி தர வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறார். அவருக்கு ஆதரவாக 25 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆனால் பாஜக மேலிடமோ புதுமுகம் ஒருவரை முதல்வராக்க விரும்புகிறது. ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கான போட்டியில் அர்ஜூன் ராம் மேக்வல், தியாகுமாரி, அஸ்வினி வைஷ்ணவ், கஜேந்திர சிங் ஷெகாவத், சிபி ஜோஷி, பாபா பாலக்நாத் ஆகியோரும் உள்ளனர். அதே நேரத்தில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை ராஜஸ்தான் மாநில முதல்வராக்கவும் பாஜக மேலிடம் பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் இம்முறையும் தம்மையே முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். ஆனால் பாஜக மேலிடமோ வேறு ஒருவரை முதல்வராக்க முனைகிறது. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களுக்கு போக முடியாது என மறுத்தார் சிவராஜ் சிங் சவுகான். ம.பி. மாநில முதல்வர் பதவிக்கான ரேஸில், எம்பி பதவிகளை ராஜினாமா செய்த நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரகலாத் சிங் பட்டேல் ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.
சத்தீஸ்கர்: பாஜக வெற்றி பெற்ற சத்தீஸ்கர் மாநிலத்திலும் புதுமுகம் ஒருவரையே முதல்வராக்க பாஜக முனைகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ரமண் சிங், முதல்வர் பதவிக்கான ரேஸில் முதல் இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் அருண் சாவ், ரேணுகா சிங், விஷ்ணு தியோ சாய், ரவிச்சந்திர நேதம் ஆகியோரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்து வருகின்றனர். சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வர்கள் யார் என முடிவெடுக்க முடியாமல் பாஜக தத்தளித்து வருவதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தும் வருகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications