உள் விவகாரங்களில்.. வெளிநாடுகளின் தலையீட்டை பொறுத்துக்கொள்ள மாட்டோம்! மம்தானிக்கு பாஜக வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி கலவர வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜேஎன்யூ மாணவர் தலைவர் உமர் காலித்துக்கு, நியூயார்க் மேயர் மம்தானி கடிதம் எழுதியிருந்தார். இது சர்வதேச அளவில், உமர் காலித் விவகாரத்தை விவாதமாக மாற்றியது. இந்நிலையில் உள்நாட்டு விவகாரங்களில், வெளிநாடுகள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

உமர் காலித் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை இல்லாமல் உபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இன்னும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இப்படி இருக்கையில்தான், காலித்துக்கு மம்தானி கடிதம் எழுதியிருந்தார்.

BJP Umar Khalid India

"அன்புள்ள உமர், கசப்புணர்வைப் பற்றிய உங்களின் வார்த்தைகளையும், அது ஒருவரை அழித்துவிடக் கூடாது என்பது குறித்தும் நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். உங்களின் பெற்றோரைச் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறோம்" என்று கடிதத்தில் கூறியிருந்தார்.

கடித்தத்தில் இந்திய அரசுக்கு எதிராகவோ, ஆட்சியாளர்களை விமர்சிக்கும் வகையிலோ எதுவும் இல்லை. இருப்பினும் உமர் காலித்தின் சட்ட போராட்டம் குறித்து சர்வதேச கவனத்தை இந்த கடிதம் ஈர்த்திருந்தது. நியூயார்க் நகரத்தின் முதல் இஸ்லாமிய மேயர் மம்தானி. அவர் பதவியேற்ற உடன் எழுதப்பட்ட முதல் கடிதம் இது என்பதால், இந்த விவகாரம் பேசு பொருளாக மாறியிருந்தது.

இந்நிலையில் மம்தானி இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக பாஜக குற்றம் சாட்டியது. இத்தகைய முயற்சிகளை இந்தியா சகித்துக் கொள்ளாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.

இந்திய உள்விவகாரங்களில் கருத்து தெரிவிக்க மேயர் மாம்தானிக்கு உள்ள அதிகார வரம்பை பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா கேள்வி எழுப்பினார். "எங்களுடைய ஜனநாயகம் மற்றும் நீதித்துறை குறித்து கேள்விகளை எழுப்பவும், இந்தியாவை உடைக்க முயற்சிக்கும் ஒருவருக்கு ஆதரவாகவும் வரும் இந்த வெளிநாட்டவர் யார்? இது நியாயமற்றது.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வந்து, இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட்டால், அதை நாடு சகித்துக் கொள்ளாது. இந்தியாவின் இறையாண்மைக்கு பிரச்சனை எனில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் 140 கோடி இந்தியர்களும் ஒன்று சேர்வார்கள்" என எச்சரித்துள்ளார். மேலும், நாட்டின் நீதித்துறை மீது இந்திய மக்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+