பாஜகவுக்கு இப்படி ஒரு விளம்பரம் தேவையா.. பேஸ்புக்குக்கு அள்ளி கொடுத்து.. அதிக விளம்பரங்களுடன் லீடிங்
பேஸ்புக் விளம்பரத்துக்கு பாஜக ஏகப்பட்ட செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது
டெல்லி: ஃபேஸ்புக் விளம்பரத்துக்காக மட்டும் பாஜக கோடி கணக்கில் செலவு செய்திருக்கிறதாம்.. "இந்த விஷயத்தில் மட்டும் பாஜக, முதலிடத்தை எப்போதுமே பிடித்துவிடுகிறதே எப்படி? பாஜகவுக்கு இப்படி ஒரு விளம்பரம் தேவையா?" என்ற விமர்சனங்கள் எழுந்து வரும் அளவுக்கு, அது சம்பந்தமான ஒரு லிஸ்ட் வெளியாகி உள்ளது!
ஃபேஸ்புக் பக்கங்களில் பாஜக பல்வேறு பெயர்களில் இயங்கி வருவதாகவும், அப்படி செயல்படும் பக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அந்த பேஸ்புக் நிறுவனத்திற்கு விளம்பரமும் தந்து வருவதாகவும், சொல்லப்படுகிறது.. இதை முன்னிறுத்திதான், மோடி அரசுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுவதாக சமீபத்தில் கூடஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

இப்படி ஒரு புகார் எழுந்த நிலையில், ஃபேஸ்புக்கில் அதிக செலவில் அரசியல் விளம்பரம் செய்த இந்திய அரசியல் கட்சிகளில், பாஜக திரும்பவும் முதலிடத்தை பிடித்திருக்கிறதாம்.
2019-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் முதல் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் வரையிலான இந்த ஒன்றரை வருஷத்தில் இந்திய அரசியல் கட்சிகள் விளம்பரத்திற்காக மட்டும் எவ்வளவு செலவு செய்தன என்பது குறித்த லிஸ்ட் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதில், இந்த ஒன்றரை வருஷத்தில், ரூ.4.61 கோடியை ஃபேஸ்புக் விளம்பரத்திற்காக பாஜக மட்டுமே செலவு செய்துள்ளது... முதல் 10 இடங்களில் உள்ள பேஸ்புக் அக்கவுண்ட்டுகளில் 4 அக்கவுண்ட்டுகள் பாஜகவுடடன் தொடர்புடையவை என்று தெரியவந்துள்ளது. அதில் 3 கணக்குகளின் பெயர்கள் பாஜக ஆபீஸ் அட்ரசுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
"My First vote for modi" என்ற பக்கம் கடந்த 18 மாசத்தில் ரூ.1.39 கோடிக்கு செலவிட்டுள்ளது. "Bharat ke Mann ki Baat" என்ற ஃபேஸ்புக் பக்கம் ரூ.2.24 கோடி செலவிட்டுள்ளது. இந்த 2 ஃபேஸ்புக் பக்கங்களும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு 4 மாசத்துக்கு முன்பாகவே தொடங்கப்பட்டதாகும். "Nation with Namo" என்ற ஃபேஸ்புக் பக்கம் ரூ.1.28 கோடியும் பாஜக முன்னாள் எம்பி ஆர்கே சிங்கா தொடர்புடைய ஒரு பக்கம் 65 லட்சம் ரூபாயையும் செலவிட்டுள்ளது.
ஆக, இந்த கணக்கை எல்லாம் மொத்தமாக சேர்த்து பார்த்தால், பாஜகவின் செலவு ரூ.10.17 கோடியாக உயரும் என்று கூறப்பட்டுள்ளது.. காங்கிரஸ் கட்சிக்கு இந்த 18 மாசத்தில் மொத்தமாக செலவு செய்யப்பட்ட தொகை ரூ.1.84 கோடியாம். ஆம் ஆத்மி கட்சி 69 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது.
இது பாஜகவுக்கு தேவையா? இப்படி ஃபேஸ்புக்கில் செலவு செய்துதான் மக்களிடையே நிறைய உண்மையை மூடி மறைப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன!
-
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications