டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக இணையதளம் இன்னும் செயல்படவில்லை.. 15 நாட்களாக முடங்கியிருப்பதால் பரபரப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜகவின் இணையதளம் முடக்கப்பட்டு 15 நாட்களாகியும் அதை அக்கட்சியால் சரி செய்யமுடியவில்லை.

பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.bjp.org கடந்த 5-ஆம் தேதி ஹேக்கர்களால் முடக்கப்பட்டுவிட்டது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இது போன்ற செயலால் பாஜகவினர் கலங்கியுள்ளனர்.

பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள், சாதனைகள் என அந்த இணையதளத்தில் பல்வேறு தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

<strong>EXCLUSIVE:</strong> கட்சி கொடி, பேனர் இதெல்லாம் தூக்கிட்டு வரக் கூடாது.. ஒரு கட் அண்ட் ரைட் அதிரடி கிராமம்!EXCLUSIVE: கட்சி கொடி, பேனர் இதெல்லாம் தூக்கிட்டு வரக் கூடாது.. ஒரு கட் அண்ட் ரைட் அதிரடி கிராமம்!

நடவடிக்கை

நடவடிக்கை

இது போல் முடக்கப்பட்டு 15 நாட்களாகியும் இன்னும் அதை மீட்கவில்லை. அதில் பதிவிடப்பட்ட தகவல்களை அப்படியே திரும்ப பெறும் முயற்சியில் சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பொறுப்பேற்கவில்லை

பொறுப்பேற்கவில்லை

இந்தச் செயலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்போ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கவில்லை. பாஜக சார்பில் இதுகுறித்து யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.

மீண்டும் சந்திப்போம்

மீண்டும் சந்திப்போம்

எனினும் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தின் முகப்பில், ''இடையூறுக்கு வருந்துகிறோம். பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் மீண்டும் சந்திப்போம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

நாட்டின் பாதுகாவலர்கள் என கூறிக் கொள்ளும் பாஜகவின் இணையதளத்தையே முடக்கிவிட்டார்கள். இதை பாதுகாக்க முடியாத பாஜக எங்கிருந்து இந்தியாவை பாதுகாக்கும் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.

English summary
BJP's official website has been non-functional, apparently after being targeted by hackers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X