"மிஷன் 2024.." இந்தி ஹார்ட் லேண்ட் முதல்வர்கள் யார்? மோடி கையில் எடுக்கும் ஆயுதம்.. விஷயமே இதுதான்
டெல்லி: இந்தி ஹார்ட் லேண்ட் பகுதியில் பாஜக 3 மாநிலங்களை வென்றுள்ளது. அடுத்து அங்கே யார் முதல்வர் என்பதில் தான் மிகப் பெரிய விவாதமே நடந்து வருகிறது. இன்று அல்லது நாளைக்குள் அம்மாநில முதல்வர்கள் யார் என அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
5 மநில தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் வட மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வென்றுள்ளது.

தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அதேநேரம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் முதல்வர் யார் என்பதை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை.
முதல்வர் யார்: இதற்கிடையே 2024 லோக்சபா தேர்தலைக் கருத்தில் கொண்டு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநில முதல்வர்களை பாஜக தேர்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மூன்று மாநிலங்களிலும் புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்கு எண்ணிக்கையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக மிக பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த மூன்று மாநிலங்களில் முதல்வர் யார் என்பது குறித்து இதுவரை மத்திய அரசு எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
நீண்ட ஆலோசனை: மூன்று மாநிலங்களில் முதல்வர்களாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து நேற்று பிரதமர் இல்லத்தில் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் நான்கரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூன்று மாநிலங்களில் இருக்கும் முக்கிய தலைவர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமித் ஷா மற்றும் நட்டா ஆகியோர் ஏற்கனவே மாநிலத் தலைவர்களிடம் அங்குள்ள நிலை குறித்து கருத்துக் கேட்டு கூட்டங்களை நடத்தி இருந்தனர். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. பாஜவின் மத்திய தலைமை விரைவில் இந்த மூன்று மாநிலங்களுக்கும் பார்வையாளர்களை நியமிக்கும் எனத் தெரிகிறது.
முதல்வர் ரேஸ்: இந்த மூன்று மாநிலங்களில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்கள் சட்டசபையில் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் கூட்டங்களில் இந்த பார்வையாளர்களும் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது. மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் படேல், ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் நரேந்திர சிங் தோமர் மற்றும் மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்கியா ஆகியோர் முதல்வர் ரேஸில் இருக்கிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் ரேசிஸ் பல பெயர்கள் உள்ளன. முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜூன் ராம் மேக்வால், ராஜஸ்தான் பாஜக தலைவர் சி.பி.ஜோஷி, தியா குமாரி, மஹந்த் பாலக்நாத் ஆகியோருக்கு வாய்ப்பு உள்ளது.
பாஜக திட்டம் என்ன: சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே முன்னாள் முதல்வர் ராமன் சிங் முதல்வர் ரேசிஸில் முன்னிலையில் இருக்கிறார். அதேபோல மாநில பாஜக தலைவர் அருண்குமார் சாவ், தரம்லால் கவுசிக், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஓ.பி.சவுத்ரி ஆகியோரும் முதல்வர் ரேஸில் இருக்கிறார்கள்.
மாநிலத்தில் யாருக்கு ஆதரவு அதிகம் என்பதை தாண்டி 2024 லோக்சபா தேர்தலையும் மனதில் வைத்தே பாஜக முதல்வரைத் தேர்வு செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும், அனைவரும் ஒருவரை நினைத்தால் லிஸ்டிலேயே இல்லாத புதிய நபருக்கு முதல்வர் பதவி கொடுப்பதும் பாஜகவின் ஸ்டைல். எனவே, இம்முறையும் கூட அதுவும் நடக்கலாம்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications