க்ளீன் ஸ்வீப்! உ.பி-இல் மிரட்டும் பாஜக.. காங்கிரஸ்- சமாஜ்வாடி இருக்கும் இடமே தெரியல! ஜீ நியூஸ் சர்வே
டெல்லி: நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் வரும் லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்து புதிய சர்வே முடிவுகளை ஜீ நியூஸ் வெளியிட்டுள்ளது.
நமது நாட்டில் மிக விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த லோக்சபா தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே ஜீ நியூஸ் நிறுவனம் இப்போது இந்த லோக்சபா தேர்தல் குறித்த சர்வே முடிவை வெளியிட்டுள்ளது. அதில் மாநிலம் வாரியாக எந்தக்கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
ஜீ நியூஸ் சர்வே: அதில் இந்தியா கூட்டணி எந்த அளவுக்கு இந்த லோக்சபா தேர்தலில் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கேட்கப்பட்டு இருந்தது. அதில் 58 சதவீதம் பேர் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளனர். அதேநேரம் 21 சதவீதம் பேர் சிறிய பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளனர். இந்த சர்வேயில் பாஜக 400+ இடங்களில் வெல்லும் என்று இந்த ஜீ நியூஸ் சர்வே கூறியுள்ளது. அதேநேரம் இந்தியா கூட்டணி 90 இடங்களில் மட்டுமே வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் உத்தரப் பிரதேசம் தான் ரொம்பவே முக்கியமான மாநிலம். ஏனென்றால் வேறு எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத வகையில் உபி-இல் இருந்து மட்டும் சுமார் 80 எம்பிக்கள் லோக்சபாவுக்கு வருகிறார்கள். எனவே, உத்தரப் பிரதேசம் ரொம்பவே முக்கியமான மாநிலமாக இருக்கிறது. பொதுவாக லோக்சபா தேர்தலில் எந்த கட்சி உபி-இல் அதிக இடங்களில் வெல்கிறதோ.. அந்தக் கட்சி தான் மத்தியில் ஆட்சி அழைக்கும் என்று சொல்வார்கள்.
உத்தரப் பிரதேசம்: கடந்த முறை லோக்சபா தேர்தலில் பாஜக 62 இடங்களில் வென்றது. பாஜக கூட்டணியில் போட்டியிட்ட அப்னா தால் (சோனேலால்) 2 இடங்களில் வென்றது. பகுஜுன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி போன முறை கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நிலையில் அவர்கள் முறையே 10 மற்றும் 5 இடங்களில் வென்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி மட்டும் ரேபரேலி தொகுதியில் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 சீட்களில் பாஜக கூட்டணி 78 இடங்களில் வெல்லும் என்று ஜீ நியூஸ் சர்வே தெரிவித்துள்ளது. சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறியுள்ளது. மாயாவாதி ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்பு இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள்: வடகிழக்கு மாநிலங்களான அசாம் மாநிலத்தில் மொத்தம் 14 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அங்கே 11 தொகுதிகளில் பாஜக வெல்லும் என்று அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஏஐயுடிஎஃப் மூன்று இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மீதமுள்ள 11 இடங்களில் 10 இடங்கள் பாஜக வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் இந்தி ஹார்ட் லேண்டில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தி ஹார்ட் லேண்டில் காங்கிரஸ் கட்சிக்கு மிகக் குறைவான இடங்களே கிடைக்கும் என்று இந்த ஜீ நியூஸ் சர்வேயில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications