"இந்தி ஹார்ட் லேண்ட்!" அப்படியே அள்ளும் பாஜக.. காங்கிரஸ் நிலை ரொம்பவே மோசமா இருக்கே! ஜீ நியூஸ் சர்வே
டெல்லி: இந்தி ஹார்ட் லேண்ட் மாநிலங்களில் லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம் கிடைக்கும் என்பது தொடர்பாக ஜீ நியூஸ் புதிய சர்வே ஒன்றை வெளியிட்டுள்ளது.
நமது நாட்டில் மிக விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது..

இந்த முறை பாஜக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கிறது. இதற்கிடையே லோக்சபா தேர்தல் தொடர்பாக ஜீ நியூஸ் புதிய சர்வே முடிவுகளை இப்போது வெளியிட்டுள்ளது.
இந்தி ஹார்ட் லேண்ட்: இந்தி ஹார்ட் லேண்டில் முக்கிய மாநிலமாக உள்ள மத்தியப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் அதிக இடங்களைப் பெறும் என்று ஜீ டிவி சர்வேயில் கூறப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 லோக்சபா தொகுதிகளில் 28 இடங்களை பாஜக கைப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அங்கு ஒரே ஒரு இடத்தில் மட்டும் காங்கிரஸ் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த இரண்டு தேர்தல்களிலும் பாஜகவுக்கு மிகச் சிறப்பான முடிவுகள் வந்துள்ளது. கடந்த 2019 தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக 28 இடங்களில் வெற்றி பெற்றது. அதே சமயம் சிந்த்வாரா மக்களவைத் தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதேபோல 2014 தேர்தலில் பாஜக 27 இடங்களில் வெற்றி பெற்று குணா மற்றும் சிந்த்வாராவில் காங்கிரஸ் வென்று இருந்தது.
வாக்கு சதவிகிதம்: வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை மத்தியப் பிரதேசத்தில் பாஜக வரும் தேர்தலில் 62% வாக்குகளைப் பெறும். அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 32%ஆக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 58% வாக்குகளையும் காங்கிரஸ் 34.5% வாக்குகளையும் பெற்று இருந்தது. அதேநேரம் 2014 மக்களவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக 54.8% வாக்குகளைப் பெற்று நிலையில், காங்கிரஸ் 35.4% வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர்: இந்தி ஹார்ட் லேண்டில் மற்றொரு முக்கிய மாநிலமான சத்தீஸ்கரில் மொத்தம் 11 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே பாஜக 11 இடங்களில் வெல்லும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் வெல்லும் எனக் கூறப்பட்டு இருக்கிறது. கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பாஜக 10 இடங்களையும், 2019இல் 9 இடங்களையும் வென்று இருந்தது. அதேநேரம் 2014இல் 1 இடத்திலும், 2019இல் 2 இடங்களிலும் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜார்கண்ட்: மற்றொரு இந்தி ஹார்ண்ட் லேண்ட்டில் ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 14 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே பாஜகவின் என்டிஏ கூட்டணி 13 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டில் பாஜக 12 இடங்களில் வென்ற நிலையில், காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை 2019இல் பாஜக 56% அப்படியே அள்ளியது குறிப்பிடத்தக்கது.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications