மோடிக்கு இமாலய ஆதரவு.. இந்தி மாநிலங்களான ம.பி, ராஜஸ்தானில் பாஜகவுக்கு பிரம்மாண்ட வெற்றி! பரபர சர்வே
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதில் ராஜஸ்தான் மத்தியப் பிரதேச மாநிலங்களில் எந்தக் கட்சி வெல்ல வாய்ப்பு அதிகம் என்பது குறித்த முக்கிய சர்வே முடிவு இப்போது வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு சில காலம் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டன. கூட்டணி, தொகுதிப் பங்கீட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன.

தேசியளவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. மறுபுறம் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.
மத்தியப் பிரதேசம்: இதற்கிடையே இந்த லோக்சபா தேர்தல் குறித்து பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே மூட் ஆப் தி நேஷன் என்ற சர்வே முடிவை வெளியிட்டுள்ளது. அதில் வடமாநிலங்களில் பாஜகவுக்கு மிகப் பெரிய ஆதரவு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதாவது இன்று லோக்சபா தேர்தல் நடைபெற்றால் மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 இடங்களில் பாஜக தலைமையிலான என்டிஏ 27 இடங்களில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே மூட் ஆஃப் தி நேஷன் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுக்க உள்ள அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் 35,801 பேரிடம் கருத்துக்கணிப்பை நடத்தி இந்த மூட் ஆப் தி நேஷன் சர்வேவை வெளியிட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை இந்தக் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதில் இந்தி பேசும் மாநிலங்களில் முக்கியமானதான மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 27 தொகுதிகளை அப்படியே அள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
வாக்கு சதவிகிதம்: வாக்கு சதவிகிதம் அடிப்படையில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 58% வாக்குகளைப் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் காங்கிரஸ் கட்சியால் அங்கே வெறும் 38.2% வாக்குகளை மட்டுமே பெற முடியும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை பாஜகவின் என்டிஏ கூட்டணி 28 தொகுதிகளில் வென்று இருந்தது. காங்கிரஸ் கட்சியால் வெறும் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெல்ல முடிந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான்: அதேபோல மற்றொரு முக்கிய வடமாநிலமான ராஜஸ்தானில் மொத்தம் 25 தொகுதிகள் உள்ள நிலையில், அந்த 25 தொகுதிகளையும் பாஜக அப்படியே அள்ளும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டு வரை அங்கே காங்கிரஸ் ஆட்சியே இருந்த போதிலும், காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது..
வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் பாஜகவுக்கு மட்டும் 59% வாக்குகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இது கடந்த முறை பெற்ற 61% விட சற்று குறைவு என்ற போதிலும் தொகுதிகளில் அடிப்படையில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட குறையாது. மறுபுறம் காங்கிரசுக்கு விழும் வாக்குகள் ஒரு சதவிகிதம் அதிகரித்தாலும் கூட அவர்களால் தொகுதிகள் என்று வரும் போது ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்பு இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications