தலைநகரை தட்டித் தூக்கும் பாஜக.. “ஹாட்ரிக் 100%”.. ஆம் ஆத்மி + காங்கிரஸ் சேர்ந்தும் இதுதான் நிலையா?
டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றப்போவது யார்? பெரும்பாலான ஊடகங்களின் எக்ஸிட் போல் கணிப்புகள் பாஜக, ஹாட்ரிக் ஸ்வீப் அடிக்கும் என்கின்றன.
லோக்சபா தேர்தலுக்கான கடைசி சுற்று வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்ததும், செய்தி சேனல்கள் நடத்திய எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி, தலைநகர் டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளை கைப்பற்றப்போவது யார் என்பதை செய்தி நிறுவனங்கள் கணித்துள்ளன.

தேசிய தலைநகர் டெல்லியில் மொத்தம் 7 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களிலும், மொத்தம் உள்ள 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் பாஜக தோற்கடித்தது. அதோடு, மத்தியிலும் ஆட்சியைப் பிடித்தது.
டெல்லியில் அதிக இடங்களில் வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிப்பது பல காலமாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தற்போதைய தேர்தலில் டெல்லியில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 58.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பின்படி, தேசிய தலைநகரில் பாஜக ஆறு - ஏழு இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது. சாந்தினி சவுக்கில் காங்கிரஸ் கட்சியின் ஜேபி அகர்வால், பாஜகவின் பிரவீன் கண்டேல்வால் இடையே இழுபறி நிலை உள்ளது. மற்ற அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் பாரத் - மேட்ரைஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பின்படி, NDA மூன்றாவது முறையாக டெல்லியில் மொத்தம் உள்ள ஏழு இடங்களையும் வெல்லலாம் அல்லது இரண்டு இடங்களில் தோல்வியை சந்திக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TV9 பாரத்வர்ஷா - போல்ஸ்ட்ராட்டின் படி, தேசிய தலைநகரில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும். இது நடந்தால், டெல்லி யூனியன் பிரதேசத்தில் 100% வெற்றி என்ற ஹாட்ரிக் சாதனையை அக்கட்சி எட்டிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி - PMARQ கருத்துக்கணிப்புகளின் படி, தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள 7 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. ஆக்சிஸ் - மை இந்தியாவும் பாஜகவுக்கு 6 இடங்களும், இந்தியா தொகுதிக்கு 1 இடமும் கிடைக்கும் என்று கணித்துள்ளது.
டெல்லியில் பாஜக 6 முதல் 7 தொகுதிகளை வெல்லும் என இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டுடேஸ் சாணக்யா வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகளின்படி, டெல்லியில் பாஜக 6 - 7 இடங்களையும், இந்தியா கூட்டணி 0 - 11 இடத்தையும் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியை பாஜக கைப்பற்றும் என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்து வரும் நிலையில், இந்தியா கூட்டணி 295+ இடங்களைப் பெறும், பாஜக சுமார் 220 இடங்களை மட்டுமே வெல்லும், இந்தியா கூட்டணி தனித்து வலுவான மற்றும் நிலையான ஆட்சியை அமைக்கும் என டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
எக்ஸிட் போல் முடிவுகளை, "இவை நரேந்திர மோடியின் கருத்துக் கணிப்புகள். பொதுமக்களின் கருத்துக் கணிப்பு இந்தியாவுக்கு 295 இடங்களை வழங்குகிறது, மேலும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்" என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications