கர்நாடகாவில் காங்கிரஸுக்கு அதிர்ச்சி.. லோக்சபா தேர்தலில் மொத்தமாக அள்ளும் பாஜக! ஜீ நியூஸ் சர்வே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் நமது நாட்டில் விரைவில் நடக்கும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் எந்தக் கட்சி வெல்ல வாய்ப்பு அதிகம் என்பது குறித்து ஜீ நியூஸ் சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.

நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே லோக்சபா தேர்தலுக்கான வேலைகளை அனைத்து கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன.

BJP will win the most number of seats in Karnataka lok Sabha elections says Zee news survey

ஒரு பக்கம் பாஜக தலைமையில் என்டிஏ கூட்டணி இறங்குகிறது. மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றுவதே அவர்கள் நோக்கம். அதேநேரம் மற்றொரு பக்கம் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.

கடும் மோதல்: தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே லோக்சபா தேர்தல் குறித்த சர்வேயை இப்போது ஜீ நியூஸ் வெளியிட்டுள்ளது. இதில் கர்நாடக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே கடந்தாண்டு நடந்த தேர்தல் காங்கிரஸ் வென்று ஆட்சியை அமைத்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு காங்கிரஸ் இங்கே தான் தனிப்பெரும்பான்மையுடன் வென்றது. இது காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி நிர்வாகிகளுக்கும் கூட ஒரு பூஸ்டை கொடுத்தது.

கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 135 இடங்களில் வென்றது. அப்போது கர்நாடகாவில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக 66 இடங்களில் மட்டுமே வென்றது. இருப்பினும், ஓராண்டில் லோக்சபா தேர்தல் அங்கு நடக்கும் நிலையில், இப்போது வெளியாகும் சர்வே அங்கே நேர்மாறாக கள நிலவரம் இருப்பதையே காட்டுகிறது.

யாருக்கு எத்தனை இடம்: கர்நாடகா மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெல்லும் என்று ஜீ டிவி சர்வே கூறியிருக்கிறது. மொத்தமுள்ள 28 லோக்சபா தொகுதிகளில் பாஜக 23 இடங்களில் வெல்லும் என்று ஜீ டிவி சர்வேயில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் கர்நாடகாவில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் லோக்சபா தேர்தலில் வெறும் 5 இடங்களில் மட்டும் வெல்லும் என்று ஜீ டிவி சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் அங்கே நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக 25 இடங்களில் வென்று இருந்தது. பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்தில் வென்றார். அதேநேரம் காங்கிரஸ் கட்சியும் ஜேடிஎஸ் கட்சியும் ஒரே ஒரு இடத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+