Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக கோட்டையில் “ஓட்டை” போட்ட காங்கிரஸ்.. குஜராத்திலேயே மிகப்பெரிய அடி.. லோக் போல் சர்வே ரிசல்ட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக் போல் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக கடந்த 2 தேர்தல்களைப் போல 'க்ளீன் ஸ்வீப்' அடிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாடு முழுவதும் தேர்தல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. இதற்கிடையே, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் லோக் போல் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் மாநில வாரியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

BJP winning is not easy in Gujarat and Rajasthan in lok sabha election 2024

பாஜகவுக்கு ஷாக்: அந்தவகையில், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நடத்தப்பட்ட லோக்சபா தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டுமே பாஜக ஆளும் மாநிலங்கள். அதுமட்டும் அல்லாமல், இந்த 2 மாநிலங்களிலுமே கடந்த 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் பாஜக க்ளீன் ஸ்வீப் அடித்தது. ஆனால், தற்போதைய லோக் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

குஜராத்: குஜராத்தை பொறுத்தவரை, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம். மோடி 3 முறை தொடர்ச்சியாக முதலமைச்சராக இருந்தது முதல் அம்மாநிலம் பாஜகவின் கோட்டையாகத் திகழ்கிறது. குஜராத்தில் இந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் தொகுதிப் பங்கீடு செய்து கொண்டுள்ளன. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பருச் மற்றும் பாவ்நகர் மக்களவைத் தொகுதிகளிலும், மீதமுள்ள 24 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன.

BJP winning is not easy in Gujarat and Rajasthan in lok sabha election 2024

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் வரும் லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறப்போவது யார்? என லோக் போல் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 26 இடங்களில் 21-23 இடங்களைக் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

க்ளீன் ஸ்வீப் கிடையாது: காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 3 - 5 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக லோக் போல் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவில் சேர்ந்தவர்களுக்கு சீட் வழங்கப்பட்டதால் பாஜகவினர் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் இந்தக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக, கடந்த 2014, 2019 ஆகிய லோக்சபா தேர்தல்களில் குஜராத்தில் மொத்தம் உள்ள 26 இடங்களையும் வென்று க்ளீன் ஸ்வீப் செய்தது. ஆனால், இந்த முறை அதற்கு வாய்ப்பு இல்லை என்கிறது இந்தக் கணிப்பு. மேலும், பாஜக மீதான அதிருப்தியால் வாக்கு வித்தியாசமும் பெருமளவில் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்: லோக்சபா இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ராஜஸ்தான் தான் இந்தியாவின் ஒன்பதாவது பெரிய மாநிலமாகும். எனவே ராஜஸ்தான் மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் மாநிலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 25 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய ராஜஸ்தானில் பாஜக தலைமையிலான கூட்டணி 17 - 19 இடங்களில் வெற்றி பெறும் என்று லோக் போல் நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

BJP winning is not easy in Gujarat and Rajasthan in lok sabha election 2024

பாஜக நினைத்தது நடக்காது: ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 6 - 8 இடங்களைக் கைப்பற்றும், காங்கிரஸ் கட்சி மட்டும் 4 -6 இடங்களைக் கைப்பற்றும் என லோக்போல் நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானில் கூட்டணிக் கட்சியான RLP உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 25 இடங்களிலும் வென்றது. 2014லும் பாஜக ராஜஸ்தானின் 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை க்ளீன் ஸ்வீப் வாய்ப்பில்லை என்கிறது இந்த சர்வே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+