தேர்தலுக்கு முன்பாக.. ராகுல் காந்தியை நிராயுதபாணியாக்கிய பாஜக.. பக்கா மூவ்! காங்கிரசுக்கு கஷ்டம்தான்
டெல்லி: மக்களவைத் தேர்தல் முதல் சட்டமன்றத் தேர்தல்கள் வரை ராகுல் காந்தியின் முக்கிய அரசியல் ஆயுதமாக 'சாதி கணக்கெடுப்பு' கோரிக்கை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு அறிவித்துள்ளதால், ராகுல் காந்தியின் முக்கியப் பிரச்சார அஸ்திரத்தை பாஜக கைப்பற்றிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நகர்வில் 6 முக்கிய அரசியல் தாக்கங்கள் உள்ளன.
ராகுல் காந்தியை 'நிராயுதபாணியாக்கும்' முயற்சி
சாதி கணக்கெடுப்பை அறிவிப்பதன் மூலம், ராகுல் காந்தியின் முக்கிய அரசியல் அஸ்திரத்தை அவரிடமிருந்து பறித்து, அவரைச் செயலற்றவராக ஆக்க பாஜக முயல்கிறது. 2024 லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ் சாதி கணக்கெடுப்பு மற்றும் சமூக நீதியை முக்கியப் பிரச்சினையாக்கி, இதன் மூலம் கணிசமான இடங்களைப் பீகாரில் பெற்றது.

OBC அரசியலில் ஊடுருவ முயற்சி
ராகுல் காந்தியின் OBC-யை மையமாகக் கொண்ட அரசியலை பலவீனப்படுத்துவதே பாஜக-வின் நோக்கம். உயர்வகுப்பினர், தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் மீது காங்கிரஸ் கவனம் செலுத்தியபோது OBC-க்கள் தங்களைவிட்டு விலகிச் சென்றுவிட்டதாக ராகுல் காந்தியே ஒப்புக்கொண்டார். தற்போது இந்த வர்க்கத்தினரை மீண்டும் இணைக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை பாஜக உணர்ந்துள்ளது. எனவே ஓபிசியை தங்கள் பக்கம் வைக்க பாஜக களத்தில் குதித்துவிட்டது.
பீகார் அரசியல் வியூகம்
சாதி கணக்கெடுப்பு நடத்தும் இந்த நடவடிக்கை பீகாரின் சாதி அடிப்படையிலான அரசியலில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் சமூக நீதிக்கு தாங்கள் ஆதரவானவர்கள் மற்றும் வளர்ச்சியை முன்னிறுத்துபவர்கள் என்ற வாதத்தை முன்வைக்க பாஜக-வுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
பெருமை தேடும் போட்டியில் பின்னடைவு
இந்த நடவடிக்கையை ராகுல் காந்தியின் வெற்றியாகவும், அவரை சமூக நீதியின் போராளியாகவும் காங்கிரஸ் இப்போது சித்தரிக்கும். இருப்பினும், அரசு இத்திட்டத்தை திடீரென அறிவித்த பிறகு, இந்தக் கோரிக்கையை எழுப்புவது காங்கிரஸுக்கு எளிதாக இருக்காது.
காங்கிரஸின் அழுத்தம் தொடரும்
காங்கிரஸ் வட்டாரங்களின்படி, ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் பின்வாங்க மாட்டார். மாறாக, சாதி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடவும், அந்த விவரங்களின் அடிப்படையில் விளிம்புநிலை மக்களுக்கான கொள்கைகளை வகுக்கவும் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார். இந்த விவகாரம் குறித்த விவாதம் தொடர வேண்டும் என்பதே அவரது நோக்கம்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் புதிய அரசியல்
தெலுங்கானா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் OBC விவகாரங்களில் காங்கிரஸ் தன்னை வலிமையான குரலாக முன்னிறுத்தியது. பாஜகவின் கண்களில் விரலைவிட்டு ஆட்ட அந்த மாநில காங்கிரஸ் இதை பயன்படுத்தியது. தற்போது பாஜக-வின் இந்த அறிவிப்பு அங்குள்ள அரசியல் வியூகங்களை மறுபரிசீலனை செய்ய காங்கிரஸை நிர்பந்திக்கும்.
-
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி












Click it and Unblock the Notifications