காலியாகும் ஆம் ஆத்மி! மாநிலங்களவையில் அசுர பலம் பெறும் பாஜக! இனி மொத்தமா மாறப்போகுது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி இன்று பாஜகவில் இன்று 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் இணைந்திருக்கின்றனர். மேலும் 4 எம்பிக்கள் இணைய உள்ளனர். இதன் காரணமாக மாநிலங்களவையில் பாஜக பிரமாண்ட பலம் பெற்றிருக்கிறது.

BJP
  • ராகவ் சதா: கட்சியின் மிக முக்கியமான முகம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் தேர்தல் வியூகங்களை வகுத்தவர்.
  • ஹர்பஜன் சிங்: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.
  • சந்தீப் பதக்: ஐஐடி (IIT) பேராசிரியர் மற்றும் கட்சியின் தேசிய அளவிலான அமைப்புச் செயலாளர்.

இவர்கள் மூவரும் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்திருக்கின்றனர். இவர்கள் தவிர,

  • அசோக் மிட்டல்: லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தின் (LPU) நிறுவனர்.
  • சுவாதி மாலிவால்: டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர்.
  • விக்ரம் சாஹ்னி: தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலர்.
  • ராஜேந்தர் குப்தா: டிரைடென்ட் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தொழிலதிபர்.

என 4 எம்பிக்கள் விரைவில் இணைய உள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையின்படி, ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்கள் மற்றொரு கட்சியுடன் இணைய முடிவு செய்தால், அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியாது.

எனவே கண் முன் நடக்கும் இந்த கொடுமையை, கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் வெறுமென வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

மறுபுறம் எம்பிக்கள் பாஜகவில் இணைந்துள்ளதன் மூலம், மாநிலங்களவையில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான NDA-வின் பலம் குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் சந்திக்க உள்ளது.

மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 245. இதில் பெரும்பான்மை பெற 123 இடங்கள் தேவை. NDA கூட்டணி 147 இடங்களை எட்டும்போது, இனி எந்தவொரு மசோதாவையும் நிறைவேற்ற மற்ற கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இருக்காது.

மக்களவையில் பாஜகவிற்குப் பெரிய பெரும்பான்மை இருந்தாலும், மாநிலங்களவையில் நீண்ட காலமாக அக்கட்சிக்கு போதிய பலம் இல்லை. இதனால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜக கொண்டு வரும் மசோதாக்களை முடக்கவோ அல்லது காலதாமதம் செய்யவோ முடிந்தது. பல முக்கிய மசோதாக்கள் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு முடக்கப்பட்டன. இந்நிலையில் ஆம் ஆத்மி எம்பிக்களின் இணைவால் இனி இந்த பிரச்சனை இருக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+